எதை மறந்தாலும், ஆடி அமாவாசைக்கு இதை செய்ய மறக்காதீங்க...! 
 
ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் பவுர்ணமி மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.காலம் காலமாக மாதம் தோறும் வரும் அமாவாசை தினத்தன்று, விரதம் இருந்து இறந்த பெரியவர்களுக்கு (பித்ரு) படைத்து, காகத்திற்கு படைத்த உணவை வைப்பார்கள். இவ்வாறு செய்து வந்தால் பெரியவர்களின் ஆசி கிடைத்து, வாழ்வில் மேலோங்கி வர முடியும் என்பது ஐதீகம்.

பெரியவர்களை இந்த நாளில் வழிப்பட்டால் தாம் செய்த பாவம் அனைத்தும் நீங்கி, பெரியவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். நாளை ஆடி அமாவாசை என்பதால், மறக்காமல் இதை செய்வது நல்லது. இந்த நாளில் ஆடி அமாவாசையில் உயிரினங்களுக்கு தானம் வழங்க வேண்டும்.

பித்ரு கடனும், செல்வம் சார்ந்த பண பிரச்னை தீர, காகத்திற்கு நாளை காலை எள் கலந்த சாதம் கொடுக்க வேண்டும்.மதிய வேளையில், கோதுமை தவிடு மற்றும் வெல்லம் கலந்த உணவை கொடுக்க வேண்டும். மாலை நேரத்தில், அருகில் உள்ள கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அரிசி பொரியை தர வேண்டும்.

நாளைய தினத்தில் இவை எதையும் தர முடியவில்லை என்றால், இன்று இரவே தவிடும் கரும்பு சக்கரையும்,மாடு வைத்துள்ள நபர்களிடம் கொடுத்து நாளை தங்கள் சார்பாக மாட்டிற்கு கொடுத்து விடுங்கள் என கூறலாம். அதுமட்டுமில்லாமல் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.