Asianet News TamilAsianet News Tamil

"பாவாடை தாவணி" அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

we must know the secret of wearing the half saree
we must know the secret of wearing the half saree
Author
First Published Nov 20, 2017, 4:39 PM IST


பெண் பிள்ளைகள் எந்த ஆடை உடுத்தினாலும் அதில் உள்ள அழகே  அழகுதான்...என்னதான் மாடர்ன் ஆடையில்  வலம் வந்தாலும் நம் கண் முன்னே வந்து நிற்பது லட்சுமி கடாச்சமாக  தோற்றமளித்த அந்த பாவாடை தாவணி  அணிந்த முகம் தானே....

அதேபோல் இன்றைய மாடர்ன் பெண்களும் ஏதாவது விழா என்றால் பாவாடை  தாவணி அணியதான் செய்கிறார்கள்.ஆனால் நம் முன்னோர்கள் எதற்காக பருவமடைந்த பெண்களை பாவாடை தாவணி அணிய செய்தார்கள் தெரியுமா?

இதன் பின் ஒளிந்திருக்கும் அற்புதமான ரகசியம் என்ன என்பதை பார்க்கலாம்

பருவமடைந்த பெண்கள்

பருவமடைந்ததில் இருந்து, பெண்களுக்கு கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

we must know the secret of wearing the half sareeஎதற்கு இந்த காற்றோட்டம் தேவைப்படுகிறது ?

பெண்களின் கர்ப்பபையில் அதிக உஷ்ணம் ஏற்படாமல் தடுத்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான் இந்த பழக்கம் இருந்தது..ஆனால் காலப்போக்கில் மாடர்ன் ஆடைகள் வந்ததால், காற்றோட்டம்  இல்லாமல் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பபையில் நீர்க்கட்டி உருவாகிறது.

we must know the secret of wearing the half saree

ஆங்கிலத்தில் Polycystic Ovarian Disease (PCOD) என அழைக்கப்படும் இந்த  நீர்க்கட்டிகள் உடல் உஷ்ணம் அடைவதால் ஏற்படுவதே.....

அதாவது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் இந்த பிரச்னையால், பிற்காலத்தில் குழந்தையின்மையை தருகிறது என்பது நமக்கு  தெரிந்த ஒன்றே...

we must know the secret of wearing the half saree

இதை மனதில் வைத்தாவது அடிக்கடி பழமை மாறாமல் பாவாடை  தாவணி, சேலைகளை அணிந்து பழகுவது நல்லது....

ஹார்மோன் பிரச்னை வேறு எப்படி ஏற்படுகிறது என்பது தெரியுமா ?

முன்பெல்லாம் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அமர்ந்த இடத்திலிருந்தே வேலை செய்கிறோம் அல்லவா...பிறகு எப்படி ஹார்மோன்கள் பிரச்சனை வராமல் இருக்கும் சொல்லுங்கள்...

பெண் பிள்ளைகள் தான் நம் குலவிளக்கு அவர்களை  பேணிகாப்பது நம் கையில் தான் உள்ளது.....மேலும் சில முக்கிய  குறிப்புகளை அடுத்த பதிப்பில் பார்க்கலாம்

Follow Us:
Download App:
  • android
  • ios