we have to take nilavembu kasayam for dengue

நிலவேம்பு கசாயத்தை ...டெங்கு வந்தால் தான் கொடுக்க வேண்டுமா என்ன ?

தமிழகத்தில் தற்போது பெரும் சவாலாக உள்ள டெங்கு, பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

ஒவ்வொரு நாளும் டெங்குவால் பாதிக்கபட்டவர்களில் பலர் உயிர் இழக்கின்றனர்.இந்நலையில் அரசு மருத்துவமனையில் பல உயர்தர சிகிச்சை அளித்தும் கட்டுபடுத்த முடியாத டெங்கு ஜுரம், நிலவேம்பு கசாயம் கொடுத்தால் சரியாகும் நிலை எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் வைக்கப்பட்டுள்ளது.

எந்த காய்ச்சலாக இருந்தாலும் பராவியில்லை இந்த கசாயத்தை குடிப்பதால்,அந்த காய்ச்சல் பறந்து போகுமே தவிர இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதே வேளையில் ஜுரம் இருந்தால் தான் இதனை அருந்த வேண்டும் என்பது கிடையாது. இதற்கு மாற்றாக,நம்மால் முடியும் தருவாயில் அவ்வபோது இதனை அருந்தி வந்தால் காய்ச்சல் வருவதை கூட தடுக்கலாம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பு கசாயத்தை அனைவரும் அருந்தி வைரஸ் காய்ச்சலில் நாம் சிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்