அட்சய திருதி

சித்திரை மாத வளர்பிறையல் வரும் திருதியை அட்சய திருதி என கூறுகிறோம்.

வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த அட்சய திருதியானது நாளை மறுதினமான  புதன்கிழமை18 ஆம் தேதி வருகிறது.

அட்சயம் என்றாலே வளர்வது என்பது பொருள்...அதாவது அன்றைய தினத்தில் எதனை செய்தாலும் எதனை தொடங்கினாலும்,அந்த விஷயம் மேன்மேலும் பெருகி செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அதுமட்டும் இல்லாமல், பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்...ஆனால் இந்த முறை அக்ஷய திருதி புதன் கிழமை வருகிறது

பிரம்மன் தனது சிருஷ்டி தொழிலை தொடங்கியது முதல் வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் சூரிய பகவானிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்றது, பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன் லட்சுமி தேவியை  வணங்கி செல்வத்தை பெற்றது இவை அனைத்துமே அக்ஷய திருதியை நாளில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் தான் அக்ஷய திருதி அன்று பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இன்றைய தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் தான் வாங்க   வேண்டும் என்பதில்லை....பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் வாங்கலாம்.

பவிஷ்ய புராணம்

அக்ஷய திருதி அன்று பிறருக்கு தானம் வழங்குவது ஆக சிறந்ததாக  கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில், உடுக்க உடை,நீர், மோர் என நம்மால் முடிந்ததை மறவர்களுக்கு கொடுக்கலாம்.

இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் வறுமை தீரும்.

கால் நடைகளுக்கு  தீவனம் மற்றும்  உணவு  அளிக்கலாம்

இன்றைய தினத்தில் தானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட   பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்

இதே போன்று, கல்வி,கலைகள்,மாங்கல்ய நிகழ்வுகள்,காத்து குத்து இது போன்ற எந்த ஒரு நல்ல விஷேசங்களும் இன்றைய தினத்தில் செய்வது நல்லது