watermelon for summer

கோடை காலத்தில் பொதுவாகவே அதிக தண்ணீர் குடிக்க தோன்றும் , அதே வேளையில் நம் உடலிலிருந்து அதிக படியான வியர்வை வெளியேறும் . இதனை சமாளிக்க அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு தர்பூசணி சாப்பிட்டால் மிக சுலபமாக நம் உடலை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கோடைக் காலத்தில் தர்பூசணி விளைச்சல் பன்மடங்காக இருக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.

தர்பூசணியில் உள்ள பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம். 

கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூஸை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும். 

இதில் வைட்டமின் பி1, சுண்ணம்புசத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.

 இத்தனை சிறப்பு வாய்ந்த தர்பூசணி பழம் நம் அனைவருக்கும் நல்லதே. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பார்கள் அதற்கேற்றார் போல், தர்பூசணி பழத்திற்கு சரியான காலம் இதுதான் என்பதால் தினமும் சாப்பிடலாம்.