Watching Violence Movies : இன்றைய காலகட்டத்தில் ஆக்ஷன் படங்களை பலரும் விரும்புகிறார்கள். அதனால்தான் இது போன்ற திரைப்படங்கள் அதிகளவில் உருவாகின்றன. சமீபத்தில் வெளியான அனிமல் படமும் மாபெரும் வெற்றியடைந்ததற்கு இது சாட்சி.

ஆனால் திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறை நம்மைப் பல வழிகளில் பாதிக்கிறது என்று கூறப்படுவது உண்மையா? வாருங்கள் இந்த பதிவில் அதுகுறித்து காணலாம். சமீப காலமாக, ஆக்ஷன் மற்றும் வைலென்ஸ் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதனால்தான் தற்போது இதுபோன்ற பல திரைப்படங்களும், இணைய தொடர்களும் அதிக அளவில் வெளியாகின்றன. 

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. பலரும் இந்த படத்தை விரும்பி பாராட்டினர், ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. இருப்பினும், படத்தில் காட்டப்பட்டுள்ள பல காட்சிகள் மற்றும் அதிக ஆக்‌ஷன் உள்ளடக்கம் உள்ள டயலாக்குகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது வெறும் திரைப்படம் தான் என்றபோதும், மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். 

குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக இருக்க.. தினமும் காலை 'இந்த' பழக்கங்களை செய்ய மறக்காதீங்க..!

குறிப்பாக ஆரோக்கியம் என்று வரும்போது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் வன்முறைத் திரைப்படங்களைப் பார்ப்பது மக்கள் மனதில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்ற கேள்வி நம்மில் எழுகிறது. அயோவா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் 2017 பகுப்பாய்வின்படி, வன்முறைத் திரைப்படங்கள் அதை தொடர்ந்து பார்ப்பவர்கள் மனதில், ஆக்கிரமிப்பு எண்ணங்கள், கோப உணர்வுகள், விரோத எதிர்பார்ப்புகள், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் வன்முறைக்கு உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அதே போல இது அவர்களின் சமூக நடத்தையை பாதிக்கிறது, இது அவர்களிடம் உள்ள பச்சாதாபத்தையும் குறைக்கிறது என்று புதுதில்லியில் உள்ள துளசி ஹெல்த்கேரின் மனநல மருத்துவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கௌரவ் குப்தா ஜாக்ரன், எப்படி வன்முறைத் திரைப்படங்கள் மனநலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கினார். 

ஒருவர் வன்முறை திரைப்படங்களைப் பார்க்கும்போது, அது அவர்களை மேலும் ஆக்ரோஷமாக ஆக்குகிறது. இருப்பினும், எல்லோரும் வன்முறை சார்ந்த படங்களை பார்க்கும்போது வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் நிச்சயம் அது வெகு சிலரது நடத்தையை பாதிக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.

ரொம்ப கம்மி விலையில் நேபாளத்தை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் பட்ஜெட் டூர் பேக்கேஜ்..

இத்தகைய திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உணர்திறன் கொண்டவர்கள் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும்போது பயம் அல்லது பதட்டத்தை அனுபவிக்கலாம். ஆகவே இதுபோன்ற படங்களை தொடர்ச்சியாக பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.