விநாயகர் சதுர்த்தி நாளில் கண்டிப்பா செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன?
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் போது கிரீடம், குடம் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். விநாயகர் சிலையை கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் மட்டுமே வைக்க வேண்டும்.
நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி ஆகும். முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதே போல் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மேலும் அனைவரின் வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் கடைகளில் வாங்கி வந்த விநாயகர் சிலையை வைத்தும், சிலர் தாங்களே விநாயகர் சிலைகளை செய்தும் வழிபடுகின்றனர். வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் போது விநாயகருக்கு கட்டாயம் தலையில் கிரீடமும், கையில் குடையும் இருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி 2024 : தேதி, நேரம் முக்கியத்துவம் மற்றும் பூஜை விதி..
விநாயகருக்கு கிரீடமும், குடையும் இல்லை என்றால் அது முழுமை பெறாது. ஆனால் கிரீடமும், குடையும் வைத்து விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையையே வாங்கி பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். விநாயகர் சிலைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து வீட்டிற்கு வரவேற்க வேண்டும்.
விநாயகர் சிலையில் விநாயகருடன் அவரின் வாகனமான மூஷிகமும், மிகவும் விருப்பமான மோதகமும் கட்டாயம் இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
விநாயகர் பாடல்கள், மணி ஓசை எழுப்பி உற்சாக திருவிழா கொண்டாட்டத்துடன் விநாயகரை வீட்டிற்கு வரவேற்க வேண்டும்.
வீட்டில் விநாயகர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு 3,5,7,10,11 என்ற எண்ணிக்கையில் அதாவது ஒற்றப்படை அடிப்படையில் நீர் நிலைகளுக்கு சென்று கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி என்ன செய்யக்கூடாது?
வீட்டில் வைக்கப்படும் விநாயகரின் துதிக்கை வலதுபுறம் திரும்பியவாறு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது வீட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் விநாயகரின் துதிக்கை இடது பக்கம் இருந்தால் வீட்டில் நன்மைகள் பெருகும். விநாயகர் சிலை வீட்டில் இருந்தால் அனைத்து நாட்களிலும் அவரை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது. தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.
வீட்டில் விநாயகர் சிலையை மட்டும் தனியாக வைத்து வழிபடக்கூடாது. வீட்டில் எத்தனை விநாயகர் சிலை வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அதனுடன் லட்சுமி தேவியின் சிலை அல்லது பார்வதி, முருகன் யாருடைய சிலையையாவது சேர்த்து வைக்க வேண்டும்.
கெட்ட சக்திகளிடம் இருந்து உங்க வீட்டை பாதுகாக்க 5 வழிகள்!!
கற்பூர ஆரத்தி காட்டி, பூஜை செய்யாமல் விநாயகர் சிலையை எடுத்து சென்று ஒருபோது நீர்நிலையில் கரைக்கக்கூடாது.
வீட்டில் விநாயகரை ஸ்தாபனம் செய்த பின்னர், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட தாஸ்மிக உணவுகளை உட்கொள்ள கூடாது. சாத்வீக உணவுகளை சமைத்து விநாயகருக்கு படைக்க வேண்டும்.