village people shifted to another place due to devil
தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 60 கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.
கல் உடைக்கும் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த அந்த குடும்பங்கள் தற்போது பேய்கள் இருப்பதை நம்பி ஊரையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.
காசிகுடா கிராமத்தில் பெண் பேய்கள் அதிகம் இருப்பதாகவும், இந்த பேய்கள் ஆண்களையே குறி வைத்து இரவு நேரத்தில் தாக்கி வருகிறது எனவும் பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கவே, பீதி அதிகமாகியது
அதற்கேற்றார் போல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவம் நடந்துள்ளதால், அந்த கிராமமே தேவை இல்லை என முடிவு செய்த ஒட்டுமொத்த கிராமக்கள் ஒன்றாக பேசி,முடிவு செய்து அந்த ஊரையே காலி செய்துவிட்டு, வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மிக அழகாக இருந்த அந்த குக்கிராமம், தற்போது பேய் கிராமமாக பேசப்பட்டு,அந்த கிராமம் பக்கம் யாரும் செல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
