மனிதர்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியம். இதை அதிகரிக்க செய்ய என்னென்ன செய்யலாம் என்பதைக் குறித்து தற்போது பார்க்கலாம். 

உடலின் வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம். இவை தான் உடலின் உண்மையான போராளிகள். சிலருக்கு எளிதில் நோய் தாக்கும். சிலர் என்ன செய்தாலும் அவர்களை நோய் அண்டாது. இதற்கு காரணம் வெள்ளை அணுக்கள் தான். நம்மில் பலரும் ஏதோ உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவோம். ஆனால் நாம் சாப்பிட்ட உணவில் எவ்வளவு சத்துகள் உடலில் தங்குகிறது என்பதை என்றேனும் கவனித்தது உண்டா? 

இதைக் கவனிக்காமல் விட்டவர்கள் இனி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான உணவுகளை எடுத்துக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். என்னென்ன உணவுப் பொருட்கள், பழக்க வழக்கங்கள் மூலம் இதை அதிகரிக்கச் செய்வது என்பது பற்றி தற்போது காணலாம். முதலில் வீட்டிலும், அலுவலகத்திலும் தேநீர் குடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் சர்க்கரை நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்துவிடும். இதற்குப் பதிலாக தினமும் பசும் தேநீர் அருந்தலாம், அதுவும் சர்க்கரை இல்லாமல்.. 

நொறுக்குத் தீனி உண்பவர்கள் இனி தினமும் 2 பாதாம்கள் உண்டால் கூட போதுமானது, பாதாமில் அவ்வளவு புரதச் சத்து உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கச் செய்யும். உணவில் உள்ள சிறிய வெங்காயம் போன்றவற்றை ஒதுக்காமல் உண்பது மிக மிக நல்லது. ஏனெனில் வேறு எந்த உணவிலும் இல்லாத சிறப்பு சிறிய வெங்காயத்திற்கு உண்டு. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை இது அபரிமிதமான வகையில் பெருக்கும்.

 

சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவி சுகாதாரம் பேணுகையில் நமக்கு வரக் கூடிய ஆபத்தை நாமே முறியடிக்க முடியும். கிருமிகள் உடலில் சேராமல் இருந்தாலே எந்த நோயும் நம்மை அண்டாது. குளிக்கும் போது இனிய இசையை வாயில் முனுமுனுத்தபடி குளிப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இது மட்டும் அல்லாமல் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் சிறிது தூரம் சீரான வேகத்தில் ஓடுவது ரத்த ஓட்டத்தை சீராக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை பலப்படுத்தும். இதை விட முக்கியமான ஒன்று நல்ல உறக்கம், உழைப்பிற்காக நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ அதே அளவு உறக்கத்திற்கும் செலவிட வேண்டியது அவசியம். ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருப்பது உடலை பலவீனப்படுத்தி விடும். முடிந்த வரையில் காய்கறிகளை பச்சையாக உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடுவதையும் வாடிக்கையாக கொண்டால் நோய் அண்ட ஒரு வழியும் இல்லை.