Vallarai Keerai Health Benefits : வல்லாரைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வல்லாரைக் கீரை மருத்துவ மூலிகையாகும். ஏனெனில் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. கீரை விற்பவர்களிடம் இந்த வல்லாரைக்கீரை எளிதாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டு தோட்டத்திலும் வல்லாரை கீரையை வளர்க்கலாம். 'வல்லமை தரும்' என்று சொல்லப்படும் இந்த கீரை நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. வல்லாரைக் கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி இப்போது இந்த பதிவில் வல்லாரைக்கீரையை எப்படி சமைக்கலாம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வல்லாரைக் கீரை எப்படி சமைக்கலாம்?

பொரியல் :

வல்லாரை கீரையில் பொரியல் செய்ய மற்ற கீரைகளைப் போலவே கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் கீரையை போட்டு வதக்கி சிறிது நேரம் சமைத்துவிட்டு பிறகு பரிமாறவும்.

கூட்டு :

பருப்புடன் வல்லாரைக் கீரையை சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் பிற மாசலா பொருட்கள் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

சட்னி அல்லது துவையல்

வல்லாரை கீரையை சிறிது வதைக்கி அதனுடன் புளி, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து தாளித்து சட்னி செய்து சாப்பிடலாம். இல்லையெனில் வல்லாரைக் கீரையுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து துவையலாகவும் சாப்பிடலாம்.

சாம்பார் :

வல்லாரைக் கீரையுடன் பருப்பு வெங்காயம், மிளகு, சீரகம் உப்பு சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து சாம்பார் வைத்தும் சாப்பிடலாம்.

வல்லாரை கீரையின் ஆரோக்கிய நன்மைகள் :

1. வல்லாரைக் கீரை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையை போக்க உதவுகிறது.

2. குடல் புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கவும் இது உதவுகிறது.

3. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வல்லாரைக் கீரை அருமருந்தாகும். தினமும் காலை மற்றும் மாலை 4-5 பச்சை வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் விரைவில் வாய்ப்புண் குணமாகும்.

4. வல்லாரை கீரையை காய வைத்து பொடியாக்கி அதை கொண்டு பல்துலக்கி வந்தால் பற்களிலுள்ள மஞ்சள் கறைகள் நீங்குவது மட்டுமல்லாமல் பல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

5. ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை சட்னி, சூப், துவையல் என எந்த வடிவிலும் சாப்பிட வேண்டும்.

6. சளி, மூட்டு வலி, உடல் எரிச்சல், காய்ச்சல், தொண்டை கட்டு, சிறுநீர் மஞ்சள் நிறமாக போகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரைக்கீரை வரப் பிரசாதமாகும்.

7. வல்லாரைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் மூளையை சோர்வைடையாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடியாக்கி தினமும் இரவு தூங்கும் முன் பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து விடும். அதுமட்டுமில்லாமல் மலச்சிக்கல், வயிற்று புண், குடல் புண் போன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

9. வல்லாரை கீரையுடன் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி அதை தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

10. வல்லாரை சற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தினமும் தலையில் தடவி வந்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

11. வல்லாரை இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடங்களில் கட்ட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் விரைவில் சரியாகும்.

12. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் வல்லாரைக்கீரை உதவுகிறது.