காதலர் தினத்தில் மட்டும் கொண்டாட்டம் இல்லைங்க, காதலர்களுக்கு ஒரு வாரம் முழுக்க கொண்டாட்டம்தான்.
பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது.

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும்.
ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 7-ம் தேதி ரோஜா தினம்:
காதலிப்பவர்களுக்கு காதல் எப்பொழுதுமே ஒரு மென்மையான விஷயம். அதனால் தான் காதலை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். அதிலும் ரெட் கலர் ரோஜாப் பூக்கள் எல்லாருக்கும் பிடித்தமான பரிசு. எனவே இந்த தினத்தன்று உங்க காதலர் மற்றும் காதலிக்கு ரோஜாப் பூக்களை பரிசாக கொடுக்கலாம்.

பிப்ரவரி 8-ம் தேதி புரப்போஸ் டே(Propose day)
காதலர் தினத்தின் இரண்டாம் நாளான இன்று மிகவும் முக்கியமானது. காரணம் உங்க அன்பானவரை நேருக்கு நேர் பார்த்து உங்கள் காதலை சொல்ல போகிறீர்கள். இந்த நாளில் உங்க துணைக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யுங்கள். விருப்பமான பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுங்கள். புரப்போஸ் செய்யும் போது கண்கள் மிகவும் முக்கியம். உங்க இருவர் கண்ணும் இணையட்டும். பயப்படாமல் அவருடைய கண்களை பார்த்து உங்க மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் டே (chocolate day)

சாக்லெட்டில் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து ஒரு முத்தம் வேண்டுமெனில் பெரிய சாக்லெட்டை வாங்கிக் கொடுங்கள்.
பிப்ரவரி 10-ம் தேதி டெட்டி தினம் (teddy day)
இந்த டெட்டி பியர்கள் கள்ளம் கபட மற்றது மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக இதை பிறருக்கு நீங்கள் வழங்கலாம். இந்த டெட்டி பியர்கள் ஒருபோதும் பூக்களைப் போல காய்ந்துவிடாது. உங்கள் காதலை எப்போதும் நினைவூட்டுவதால், பல ஆண்டுகளுக்கு இதை நீங்கள் உங்களுடனே வைத்திருக்க முடியும். இவை உங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு அருமையான பொருளாகவும்.
வாக்குறுதி தினம் (Promise Day)
காதலர்கள் தினம் வாரத்தின் ஐந்தாவது நாளாக வரும் இந்த பிராமிஸ் தினம் தான் அந்த காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்கமாக இருக்கிறது.
தழுவுதல் தினம் (Hug Day)
காதலர்கள் தினம் வாரத்தின் 6 வது நாளாக வரும் கட்டியணைக்கும் தினத்தில் நீங்கள் கட்டி அணைக்கும் போது , அன்பு, மகிழ்ச்சி, காதல் வெளிப்படுகிறது. அணைக்கும் போது சுரக்கும்‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன் தனிமை, விரக்தி, கோபம் உள்ளிட்ட பலவற்றிற்கு அருமருந்தாகும். உங்கள் அன்புக்குரியோருக்கு நீங்கள் கொடுக்கும் அணைப்பு, நீங்கள் அவர் மேல் எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு மிகச்சிறந்த வழி.

முத்த தினம் (kiss day)
காதல் மொழி பேசும் மற்றொரு விஷயம் முத்தம். முத்தம் அன்பை காண்பிக்கும் இனிமையான வடிவம். அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கலாம். ஆனால் உங்க துணைக்கு நெற்றியை வருடிக் கொடுத்து கொடுக்கும் முத்தம், குழி விழிந்த கன்னத்தில் முத்தம், இரு இதழ்கள் இணைந்த முத்தம் என்று அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி தான். எனவே இந்த நாள் அக்கறையுடன் காதலுடன் துணையை முத்தமிடுங்கள்.
