Useful kitchen tips: உங்கள் சமையலறையில் அவசியமாகத் தேவைப்படும் சின்ன சின்ன 5 குறிப்புகளை, நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்படி, தெரிந்து கொண்டால் நீங்கள் தான் உங்கள் வீட்டின் கிச்சன் குயின்.
காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சி, குறிப்பாக, காபி, டீ போட்டு குடிப்பது. அங்கு துவங்கும் இல்லத்தரசிகளின் பயணம் இரவு உறங்க செல்வது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அப்படியாக, இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையலறையில் அவசியமாகத் தேவைப்படும் சின்ன சின்ன 5 குறிப்புகளை,நீங்கள் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்படி, தெரிந்து கொண்டால் நீங்கள் தான் உங்கள் வீட்டின் கிச்சன் குயின்.

குறிப்பு 1:
புதினா சட்னி அரைக்கும் போது அதில் சேர்க்கக்கூடிய புளியை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, 1 ஸ்பூன் லெமன் ஜூஸை சேர்த்து அரைத்தால் புதினா சட்னி நீண்ட நேரம் ஆனாலும் அழகான பச்சை நிறத்திலேயே இருக்கும். இல்லையெனில், சிறிது நேரத்தில், பச்சை நிறம் பழுப்பு நிறமாக மாறி விடும்.
குறிப்பு 2 :
ஞாயிற்று கிழமை என்றதும், எல்லோரின் நினைவில் வருவதும் மீன், சிக்கன் மட்டன் வறுவல் தான், பெரும்பாலான இல்லத்தரசிகளின் வீட்டில், தோசைக்கல்லில் தான் பொரிப்பது வழக்கம். அப்படி, பொரித்து எடுத்த பிறகு அந்த கடாயில் பிசுக்கு போக முதலில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு அல்லது கான்பிளவர் மாவு தூவி விட்டு ஒரு பேப்பரோ டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுத்துவிடுங்கள். அதன் பின்னர் தேய்த்து கழுவினால் ஈஸியான இருக்கும்.
குறிப்பு 3:
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றியவுடன் அந்த தண்ணீரில் சிறிது துண்டு, எலுமிச்சை பழத்தை போட்டு விடுங்கள். அப்படி, செய்தால் இட்லி பாத்திரத்திற்கு அடியில் தண்ணீர் கொதித்துக் கொதித்து கறை படித்து இருக்காது. இட்லி பாத்திரம் அடியில் எப்போதும் புதுசு போலவே இருக்கும்.
குறிப்பு 4: முட்டையை உடைத்து பாத்திரத்தில் போட்டு கலக்கும் சமயம், சில சமயம் முட்டையுடன் சின்னதாக முட்டை ஓடு கலந்துவிடும். அந்த குட்டி முட்டை ஓட்டை எடுப்பது மிகவும் சவாலாக இருக்கும். கையில் எடுத்தாலும் வராது. எனவே, இனிமேல் நீங்கள் உங்களுடைய விரலை தண்ணீரில் நனைத்து விட்டு அதன் பின்பு அந்த முட்டை ஓட்டை விரல்களால் எடுத்து பாருங்கள். விரலில் சுலபமாக வந்துவிடும்.

குறிப்பு 5:
ரேஷன் கடையில் வாங்கிய அரிசி, பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். விக்கிற விலை வாசியில் கேஸ் அடுப்பின் சிலிண்டர் சீக்கிரம் காலியாகும்.எனவே, இனிமேல் அரிசி, பருப்பு சீக்கிரமாக வேக அதில் சிறிய துண்டு கொட்டாங்குச்சி ஓட்டை நாரை எடுத்து கழுவி போட்டு வேக வைக்கவேண்டும். இறுதியில்,அரிசி, பருப்பு பருப்பு வெந்தவுடன் ஞாபகமாக பருப்பிலிருந்து கொட்டாங்குச்சி ஓட்டை நீக்கி விடுங்கள்.
