Today astrology: சனியின் பிடியில் பாடாய் படப்போகும் ராசிகள் ...அற்புதம் பெரும் ராசிகள்! இன்றைய ராசி பலன்..!

Today astrology: சனியின் பெயர்ச்சி தொடங்க இருப்பதால், எந்தெந்த ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Horoscope today astrology predictions

சனி கிரகம், நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் ஆகும். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். 

ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 9 கிரகங்களில், சனி பகவான் ஒரு செல்வாக்குமிக்க கிரகமாக கருதப்படுகிறார். சனி அந்தந்த நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். நற்செயல்கள் செய்பவர்களுக்கு வெகுமதிகள் கிடைக்கும், தீய செயல்களைச் செய்பவர்கள் சனியின் பிடியில் மாட்டிக்கொள்ளவர்கள்.

அதன்படி, சனி ஒரு வருடத்திற்கு பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி, மகர ராசிக்கான தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த பயணம், சில ராசிகளில் ஏழரை நாட்டு சனி, சனி தசை துவங்கும். அதேசமயம் இந்த காலத்தில் ஏழரை நாட்டு சனி, சனி தசை சில ராசிகளில் முடிவடையும்.

ஜோதிடத்தின் படி,ஏழரை நாட்டு சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. இதன் முதல் கட்டம் விரைய சனி என்றும், இரண்டாம் கட்டம்  ஜென்ம சனி என்றும், மூன்றாம் கட்டம் பாத சனி என்றும் அழைக்கப்படுகின்து. இவை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பாதிப்பை உண்டு பண்ணும். அவை என்னென்ன பாதிப்புகள் யார் யாருக்கு நிகழும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவான் 2 வருடங்களுக்கும் மேலாக மகர ராசியில் இருக்கிறார். இதன் எதிரொலியாக, தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சனியின் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. அதேபோன்று, ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். 

கும்பம்:

கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டமும் தொடங்கும். எனவே, மகர ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சனி பெயர்ச்சி காதல் அல்லது திருமண உறவுகளில் சிரமங்களுக்கு வழிவகுக்கும். இது தவிர, நிதி பிரச்சனைகளும் வாழ்க்கையில் வரலாம்.

தனுசு:

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமற்றதாக இருக்கும். இந்த காலத்தில், மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் இருக்கக்கூடும். மேலும், இந்த நேரத்தில் பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சொந்த முடிவுகளை எடுக்கும் போது ஆலோசிப்பது அவசியம்.

மகரம்:

மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசிக் கட்டம் துவங்குகிறது, எனவே, மகர ராசிக்காரர்கள் குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கலாம். இது தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், மனக் கவலை மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.

இருப்பினும், தனுசு சிம்மம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுபெறுவார்கள். அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். ஆபத்து விலகும். நினைத்த காரியம் கைகூடும்.

மேலும் படிக்க....Kaal bhairav temple: ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும் எளிய பரிகாரம்....போக வேண்டிய கோவில்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios