முகத்தில் உள்ள வறட்சியைப் போக்க தயிரை கீழ்கண்டவாறு பயன்படுத்தினாலே போதும். அதுமட்டுமல்ல தயிர் முகத்தில் உள்ள வறட்சியை மட்டும் நீக்குவது மட்டுமின்றி தலைமுடியையும் மிகவும் அழகாக வைத்துக்கொள்ள உதவும்

முகத்தில் உள்ள வறட்சியைப் போக்க தயிரை கீழ்கண்டவாறு பயன்படுத்தினாலே போதும். அதுமட்டுமல்ல தயிர் முகத்தில் உள்ள வறட்சியை மட்டும் நீக்குவது மட்டுமின்றி தலைமுடியையும் மிகவும் அழகாக வைத்துக்கொள்ள உதவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தலை முடி அதிக வறட்சியாக இருந்தால், தயிர் கொண்டு மசாஜ் செய்து வர, வறட்சி நீங்கி பொலிவாக காணப்படும். இதேபோன்று எலுமிச்சை சாறுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் மென்மையாக இருக்கும் பளபளப்பாக இருக்கும்.

மேலும் தயிரை முகம் மற்றும் நம் உடம்பில் கூட தடவி வந்தால் வெயிலினால் ஏற்படக்கூடிய சரும வறட்சி முற்றிலும் நீங்கும். முகப்பருக்கள் அதிகமாக உள்ள பெண்கள் தயிருடன் சிறிதளவு கடலைமாவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வர பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும். இதேபோன்று தலையில் உள்ள பொடுகை போக்க தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் இதேபோன்று தயிருடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வாருங்கள் அதனை காய்ந்ததும் கழுவினால் வறண்ட சருமம் பளிச்சென்று மாற வைக்கும்.