உங்கள் மொட்டை மாடியிலேயே தோட்டம் அமைக்கலாம். அதற்கு என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
செடிகள் நட க்ரோ பேக் அல்லது பிளாஸ்டிக் தொட்டிகளைப் பயன்படுத்துங்கள். இது மொட்டை மாடிக்கு அதிகப்படியான சுமையைக் கொடுக்காமல் தடுக்கும்.
தொட்டிகள் மற்றும் க்ரோ பேக்குகளில் உள்ள அதிகப்படியான தண்ணீர் வெளியேற, அவற்றின் அடியில் சிறிய துளைகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
தேங்காய் நார் கழிவு, மேல் மண், காய்ந்த மாட்டுச் சாணம் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து செடிகளுக்கான மண் கலவையைத் தயாரியுங்கள்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடத்தை மாடித் தோட்டத்திற்காகத் தேர்ந்தெடுங்கள்.
காலையிலும் மாலையிலும் செடிகளுக்குத் தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றவும். மண்ணில் அதிகப்படியாகத் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வேப்பம் பிண்ணாக்கு, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செடிகளுக்குக் கொடுங்கள்.
பூச்சிகளை விரட்ட, வேப்பெண்ணெய்-பூண்டு கரைசல் அல்லது சோப்புக் கரைசலைத் தெளிக்கலாம்.
பாகற்காய், புடலங்காய், அவரை போன்ற கொடி வகைக் காய்கறிகளுக்கு மொட்டை மாடியில் சிறிய பந்தல் அல்லது கம்பிகளை அமைத்துக் கொடுக்கலாம்.
கைகளுக்கு ஸ்டைலான லுக் தரும் புதிய கோல்டு பிரேஸ்லெட் டிசைன்கள் பாருங்க
Rat Control: வீட்டில் எலித் தொல்லையா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
Hemoglobin Levels: வெறும் 7 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.!
Kitchen Hacks: இனி வெங்காயம் அழ வைக்காது! இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க