Asianet News TamilAsianet News Tamil

அம்மாடியோவ்.. கிட்டதட்ட 14 மாதங்களாக சிறுநீர் கழிக்காத பெண்.. அவருக்கு என்னாச்சு தெரியுமா?

கிட்டத்தட்ட 14 மாதங்களாக சிறுநீர் கழிக்காத பெண்... உடல்நல பிரச்சனைகள் வந்திருக்குமே.. அதையெல்லாம் எப்படி சமாளித்தார்? இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

uk woman unable to urinate for 14 months
Author
First Published Mar 25, 2023, 1:17 PM IST

நம் உடல் கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் தண்ணீர், உப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், யூரியா, யூரிக் அமிலம் ஆகிய எலக்ட்ரோலைட் ரசாயனங்கள் காணப்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது முக்கியம். சிறுநீர் வெளியேற்றப்படாத போது தான் பிரச்சனை தொடங்குகிறது. 

நாம் சிறுநீர் கழிக்கும் விதம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறது. சிலருக்கு பகலில் அடிக்கடி சிறுநீர் வரும். சிலர் இரவில் கண்விழிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.  ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிட்டத்தட்ட 14 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்கவில்லையாம். இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும், உண்மை சம்பவம். ஒரு ஆண்டுக்கும் மேல்  சிறுநீர் கழிக்காமல் வாழ்ந்த அந்த இங்கிலாந்து பெண்ணை குறித்து இப்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. 

யார் அந்த பெண்? 

அக்டோபர் 2020ஆம் ஆண்டு 30 வயதான எல்லே ஆடம்ஸுக்கு இந்தச் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதை ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் (Fowlers Syndrome) என மருத்துவர்கள் சொல்கின்றனர். இந்த நோய் வந்தால் நம் உடலால், சிறுநீரகத்தில் இருக்கும் சிறுநீரை வெளியேற்றி காலி செய்ய முடியாது என கூறப்படுகிறது. இந்த அரிய வகை நோய் இளம் பெண்களுக்கு தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு வந்த பின் ஆடம்ஸ் எவ்வளவு தண்ணீர் அல்லது மற்ற திரவங்களை குடித்தாலும், அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. 

இதையும் படிங்க: இறைவனுக்கு விரதம் இருக்கும்போது பூண்டு, வெங்காயம் சாப்பிடக் கூடாது.. இது அறிவியல் உண்மை தெரியுமா?

எப்படி நடந்தது? 

''நான் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தேன். எனக்கு வேறு எந்த பிரச்சனையும் கிடையாது. நான் ஒரு நாள் காலையில் எழுந்தபோது, என்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, சிறுநீர் கழிக்கும் உணர்வு மொத்தமாக நின்றுவிட்டது" என்று ஆடம்ஸ் பகிர்ந்து கொண்டார். 

அவர், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். மருத்துவர்கள் அவரது உடலை முழுமையாகப் பரிசோதித்து, ஆடம்ஸிம் சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர் இருப்பதாக கூறியுள்ளனர். பொதுவாக சிறுநீர்ப்பை என்றால், பெண்களில் 500 மிலி, ஆண்களுக்கு 700 மிலி சிறுநீர் தான் இருக்கும். ஆனால் ஆடம்ஸுக்கு அது வேறுமாதிரி இருந்துள்ளது. அதுவும் 1 லிட்டர் சிறுநீர் கேட்கவே பிரம்பிப்பாக இருக்கிறது. டாக்டர்கள் குழுவினர் குழாய் மூலம் அந்த சிறுநீரை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சிறுநீரகத்திற்கு சிசிச்சை பெற மருத்துவ மையத்திற்குச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆடம்ஸுக்கு சிறுநீரை சுய குழாய் செய்வது எப்படி என்று கற்பிக்கப்பட்டது, பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.  தற்போது சற்று நிம்மதியாக இருப்பதாக ஆடம்ஸ் கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!

Follow Us:
Download App:
  • android
  • ios