Asianet News TamilAsianet News Tamil

Happy Ugadi 2024 : நாளை தெகுங்கு வருட பிறப்பு.. தேதி, சுப நேரம் மற்றும் முக்கியத்துவம் இதோ!

இந்த ஆண்டு உகாதி பண்டிகை நாளை அன்று கொண்டாடப்படுகிறது. உகாதியின் முக்கியத்துவம் மற்றும் சுப நேரங்கள் பற்றி இங்கே அறியலாம்..

ugadi 2024 date time significance and celebrating procedure of telugu new year in tamil mks
Author
First Published Apr 8, 2024, 8:05 PM IST

'உகாதி' என்பது தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடப்படும் தெலுங்கு வருட பிறப்பாகும். இது சந்திர நாட்காட்டியை பின்பற்றி கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது பொதுவாக, கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வரும். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். 

அந்தவகையில், இந்த 2024 ஆம் ஆண்டில், உகாதி பண்டிகை ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதாவது நாளை கொண்டாடப்படும். இப்போது இந்த கட்டுரையில் உகாதி பண்டிகை பற்றிய முழுமையான தகவல்களை குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

உகாதி என்றால் என்ன?
உகாதி என்பது தெலுங்கு புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் பண்டிகையாகும். உகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான 'உகா' மற்றும் 'ஆதி' (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது. அதாவது 'புதிய சகாப்தத்தின் ஆரம்பம்' என்று அர்த்தம். இந்த விழாவை ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். உகாதி, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் எல்லாவிதமான துன்பங்கள் இன்பங்கள், நல்லது கெட்டது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: உகாதி 2023- பாரம்பரிய சுவையில் பால் பாயசம் செய்து உகாதியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

2024 உகாதி பண்டிகையின் முக்கியத்துவம்:
வசந்த காலத்தின் வருகையை குறிப்பதே, உகாதி பண்டிகையின் முக்கியத்துவம் ஆகும். இது புதிய வாழ்க்கை மற்றும் புதிய தொடக்கங்களின் நேரம் என்றே சொல்லலாம். மேலும், இது அறிவு மற்றும் ஞானத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. இந்நாளில், புத்தாண்டுக்கான அறிவையும் ஞானத்தையும் பெற மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெகு விமரிசையாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த நாளில், மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குவது மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

இதையும் படிங்க: Happy Ugadi 2023 Wishes: உகாதி பண்டிகையில் இந்த வாழ்த்துகளை அனுப்பி அசத்துங்கள்..!

சுப நேரம்:
பிரதிபத திதி ஏப்ரல் 8, 2024 அன்று இரவு 11:50 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 9, 2024 அன்று இரவு 08:30 மணிக்கு முடிவடைகிறது. 

2024 உகாதியை எப்படி கொண்டாடுகிறது?

  • உகாதி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பார்கள்.
  • பிறகு உகாதி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து புது ஆடைகள் உடுத்துவார்கள்.
  • பெரும்பாலான வீடுகள் வண்ணமயமான கோலங்களால் 
  • அலங்கரிக்கப்பட்டிருக்கும்
  • இந்த நாளில் கடவுளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும்
  • கோவில்கள், வீடுகள் மற்றும் கடைகளின் நுழைவாயிலில் மாவிளக்குகள் வைக்கப்படும்.
  • உகாதி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். அதில் ஒன்றுதான் பச்சடி. இது 'உகாதி பச்சடி' என்று அழைக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios