தாம்பத்ய உறவு முடிந்த உடன் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்...! நீங்கள் முயற்சி செய்துள்ளீரா..? 

நாம் எதைச் செய்தாலும் அதில் ஒரு நீட்னஸ் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அது ஒரு வேலையாக இருக்கலாம்... நாம் உடுத்தும் உடையில் இருக்கலாம்... நாம் நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கணவன் மனைவி தாம்பத்திய உறவில் கூட ஒரு சில விஷயங்களில், மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தாம்பத்திய உறவின்போது எந்த தவறை செய்யக் கூடாது என்பது தான்...

அந்த வகையில் ஒரு ஆண் பெண் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்பாக இருவருமே தூய்மையாக இருக்க வேண்டும். அதாவது குளித்துவிட்டு வாய் துர்நாற்றம் இல்லாமல் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது. அதன்பின்னர் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது இருவருக்குமே நல்லது

அவ்வாறு இல்லாமல் ஏதோ கடமைக்கு செய்வது போல ஈடுபட்டால், கண்டிப்பாக மனைவிக்கும் பிடிக்காது கணவருக்கும் பிடிக்காது. அதே வேலையில் இருவருக்கும் சமமான ஈடுபாடு இருக்க வேண்டும். 

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தாம்பத்திய உறவுக்கு பின்னர் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில் சிறுநீர் பாதை தொற்றுகளிலிருந்து விடுபடவும், வெதுவெதுப்பான நீரில் பிறப்புறுப்புகளை தூய்மை செய்து கொள்வது நல்லது. அவ்வாறு பயன்படுத்தும் போது பாதுகாப்பான சோப்புகளை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற சமயத்தில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது, ஷாம்பூ, கிரீம், இதனையெல்லாம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஆனால் வெதுவெதுப்பான சுடுதண்ணீரை பயன்படுத்தினால் பாக்டிரியாக்கள்,வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். 

அதே போன்று, அதேபோன்று தாம்பத்தியம் முடிந்தவுடன் சிறுநீர் வெளியேறுவது நல்லது. அப்படி இல்லை என்றாலும் தாம்பத்யம்  முடிந்தவுடன் உடனடியாக தண்ணீர் குடித்தால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சிறுநீரை வெளியேற்றும் தன்மை உண்டாகும் அவ்வாறு வெளியேறினால் வேறு எந்த ஒரு தொற்றுநோயும் ஏற்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.