சீனா செய்த பெரிய தவறே "இதுதான்"..! போட்டுடைத்த ட்ரம்ப்..!

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புக்கு காரணம் சீனா தான் என பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் டிரம்ப்.

அதாவது கொரோனா குறித்து முழு விவரத்தை மறைத்ததால் இன்று உலகமே அதற்கு பெரும் விலையைக் கொடுத்து வருகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

கொரோனா தாக்குதல் குறித்து விவரமாக தெரியப்படுத்தி இருந்தால் இன்று உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். சீனா செய்த பெரிய தவறுக்கு இன்று உலகமே விலைகொடுத்து வருகிறது என குறிப்பிட்டு உள்ளார். 

உலகம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் கவலை அளிக்கிறது. இத்தாலியில் ஒரேநாளில் 400க்கும் அதிகமான பேர் உயிரிழக்கின்றனர். இதுவரை 3 ஆயிரத்து 500 க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 1200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு 200க்கும் அதிகமாக உள்ளது. அதேபோன்று பிரான்சில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 200 கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோரோனா குறித்த பாதிப்பை முன்கூட்டியே தெரிவிக்காததால் தான் இவ்வளவு பெரிய இழப்பை இந்த உலகமே சந்திக்க நேரிட்டுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அனைத்து உண்மைகளையும் சீனா மறைத்ததே, அவர்கள் செய்த பெரிய தவறு என குறிப்பிட்டு உள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது