இந்த பதிவில் எந்தெந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாம் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய வீட்டில் பல வகையான செடிகள், தாவரங்களை வளர்த்து வருகிறோம். அவை வீட்டிற்கு அழகை மற்றும் புதிய தோற்றத்தை தருகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளையும் நமக்கு வழங்குகின்றன. ஆனாலும் நாம் வளர்க்கக்கூடிய சிலர் செடிகள் நம்மக்கும், நம்முடைய செல்லப்பிராணியின் ஆரோக்கியத்திற்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அவை எந்தெந்த செடிகள் என்பதை இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் வைக்கக் கூடாது செடிகள் ;
1. கலாடியம் (Caladium)
இந்தச் செடியின் இலையானது பச்சை பசேல் என்று இதய வடிவில் இருக்கும். ஆக்சலேட் க்ரிஸ்டல்கள் இதன் நிலையில் இருப்பதால் அவற்றை சுவாசித்தால் உடலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகள் இதைத் தெரியாமல் கூட தொட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.
2. பஞ்சு செடி (Cotton Plant)
இந்த செடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதை வீட்டிற்குள் வைக்கக் கூடாது. துரதிஷ்டத்தை, வறுமையை ஏற்படுத்தி விடும். அதுமட்டுமல்லாமல் அலர்ஜியையும் ஏற்படுத்தும்.
3. பாபுல் செடி (Babul Plant)
முட்கள் நிறைந்த இந்த செடியை குழந்தைகள், செல்லப்பிராணிகள் தெரியாமல் கூட தொட வாய்ப்பு உள்ளது. இதனால் காயங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இந்தச் செடி வீட்டில் இருந்தால் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை, குழப்பம் ஏற்படும். எனவே இந்த செடியை வீட்டில் ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
4. லில்லி (Lily Plant)
லில்லி செடியில் பல வகைகள் உள்ளன. இந்த செடிகள் செல்லப்பிராணிகளுக்கு அதிலும் குறிப்பாக பூனைகளுக்கு நல்லதல்ல. மேலும் இந்த செடியானது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடி சோகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
5. காக்டஸ் (Cactus)
இந்த செடியில் முட்கள் இருப்பதால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படும். ஃபெங் சுயி கூற்றுப்படி, இந்த செடியை வீட்டின் படுக்கையறை, வாசலில் வைப்பது தவிர்க்கவும்.
6. அரளி (Oleander)
இந்தச் செடியில் அழகான பூக்கள் இருந்தாலும் இது நச்சுத்தன்மையுடையது. மரணத்தைக் கூட ஏற்படுத்தும் இந்த இலையின் சாறு சருமத்தில் எரிச்சல், சொறியை ஏற்படுத்தும்.
7. ஆங்கில ஐவி (Common Ivy)
இந்த செடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இலையில் நச்சுத்தன்மை உள்ளது. மேலும் இது அரிப்பை ஏற்படுத்தும். வாசஸ்தரத்தின் படி, இந்தச் செடியை வீட்டில் வைப்பது நல்லதல்ல.
