மக்களே..! நாளை முதல்.. இரண்டு 500 ரூபாய் தாள்கள், இலவச பொருட்கள்..! பெற்றுக்கொள்ள தயாராக இருங்கள் ..! 

கொரானா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடாத வாறு பார்த்துக்கொள்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. 

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்லாமல் அரிசி, சர்க்கரை, கோதுமை துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்தும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை முன்னிட்டு நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களையும் ஆயிரம் ரூபாயும் வழங்க ஆயத்தமாகி வருகிறது கூட்டுறவு துறை. தற்போது வரை ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக 1882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நாளை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காவும், கட்டாயம் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தினமும் 70 முதல் 100 அட்டைதாரர்களுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 15 நாட்களில் அனைவருக்கும் இந்த இலவச பொருட்களையும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமூக விலகலை கடைபிடித்து நாளை முதல் பொருட்களை பெற்று செல்லலாம்