பக்காவா கணிக்கும் "கால் விரல் ரேகை ஜோதிடம்"..! சுவாரஸ்ய தகவல் உள்ளே...!
கை ரேகையை வைத்து, ஒருவருடைய வாழக்கை முறை எப்படி இருக்கும் என்பதையும், கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை கணிக்க முடிகிறது அல்லாவா..?
கை ரேகையை வைத்து, ஒருவருடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதையும், கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை கணிக்க முடிகிறது அல்லாவா..? அதே போன்று தான், குழந்தை பிறந்து எட்டி நடைப்போட்டு தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி தனது வாழ் நாள் முழுவதும் நாம் எந்த வழியில் சென்று உள்ளோம்..?
நாம் தேர்ந்தெடுத்த நல்ல வழி எது ? வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு, முயற்சி, தெரிந்தோ தெரியாமலோ தீய வழியில் சென்ற காலம் என அனைத்தையும் கால் விரல் ரேகையை கொண்டு கணிக்க முடிகிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா..? ஆமாம்... இதை பற்றி முழு ஆராய்ச்சி மேற்கொண்டு, ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி என்பவர் ஆதாரத்தோடு நிரூபித்து உள்ளார்.
அதன் படி, கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய, வாழ்கை தரத்தையும், எதிர்காலத்தையும் கண் முன்னே சொல்கிறாராம் இவர். அதுமட்டுமல்ல, பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல், பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைந்து புகழை தேடி தருமாம்.
அதுமட்டுமல்லாமல், கால் பெருவிரல் ரேகையை மட்டும் வைத்தே, யார் யார் எந்தெந்த தெய்வங்களை இஷ்டப்பட்டு வழிபடுவார்கள், அதனால் என்ன பலன்..? மேலும் யார் யார் எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ? என்பது முதற்கொண்டு அனைத்தையும் கால் ரேகை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது
கால் விரல் ரேகை மற்றும் விரல் அமைப்பை பொறுத்தும், 12 விதமான கிரக ரேகைகள் கால்விரலில் உள்ள கோடுகளோடு எப்படி பொருந்துகிறது என்பதை வைத்தே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடிகிறது
நாடி ஜோதிடம் முதல் கை ரேகை ஜோதிடம் வரை மட்டுமே தெரிந்திருந்த நமக்கு தற்போது, கால் விரல் ரேகை வைத்தே துல்லியமாக ஒரு மனிதனின் ஜோதிட பலனை நிர்ணயிக்க முடிகிறதாம்.