today lunar eclipse and these people must be in so silent
இன்று சந்திர கிரகணம்..! இன்று இவர்கள் மட்டும் இப்படித்தான் இருக்க வேண்டும்...நிகழப்போகும் மாற்றம் தெரியுமா.?
இன்று சந்திர கிரகணத்தால் 3 ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டு உள்ளது.
இன்று ஜூலை 27 வெள்ளியன்று சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இதன் மூலம் சந்திரன், பூமி மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்கவிருக்கிறது.
சந்திர கிரகணம் ஏற்படும் போது பொதுவாகவே, சந்திரன், பூமி மற்றும் சூரியன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் முழுமையாக வராததால், சில நிமிடங்கள் மட்டுமே கிரகணம் பார்க்க முடிவதாக அமைந்தது
ஆனால், வரும் வெள்ளிகிழமையன்று நடைப்பெற உள்ள சந்திர கிரகணத்தன்று இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வர உள்ளது. இந்த ஆண்டு மட்டும் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 13ம் தேதி - சூரிய கிரகணம்
ஜூலை 27 - சந்திர கிரகணம்
ஜூலை 31ம் தேதி - செய்வாய் கிரகம் பூமியை நெருங்கி செல்லும்
பொதுவாகவே கிரகணம் பிடித்தால், அன்றைய தினம் விரதம் இருந்து, எதையும் உண்ணாமல், வெளியில் நடமாடாமல் அமைதியாக வீட்டில் இருப்பார்கள்.
இன்றைய தினத்தில், குறிப்பிட்ட 3 ராசிக்காரகளுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

கும்பம்:
இவர்கள் பொதுவாகவே கலகலப்பாக இருப்பார்கள். ஆனால் சந்திர கிரகணம் அன்று சற்று கோபமாக இருப்பார்கள். எதை கண்டாலும் ஒரு விதமான எரிச்சல் இருக்கும்.. யாரிடம் பேசினாலும் அது பெரிய சண்டையாக மாற வாய்ப்பு உள்ளது.
எனவே பேசும் போது முரண்பாடு ஏற்பட்டால், அங்கிருந்து எழுந்து செல்வது நல்லது

மகரம் ராசிக்காரர்கள்
சந்திர கிரகண நாளன்று, இதன் தாக்கம் சற்று மந்தமாக இருப்பதால், பாதிப்பும் சற்று மந்தமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது
இன்றைய தினத்தில் யாரிடமும் கோபப்படாமல் இருப்பது நல்லது
சிம்மம் ராசிக்காரர்கள்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த தருணத்தில் உலகமே நம் பின்னால் தான் உள்ளது என நினைக்க தோன்றும்...
கிரகணம் நாள் தொடங்கி, இந்த மாதம் முழுவதும் வரை, சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.
