- Home
- Lifestyle
- Healthy Breakfast: காலை உணவாக இதை சாப்பிடுங்க! நாள் முழுக்க எனர்ஜி தரும் டாப் 5 ஆரோக்கிய உணவுகள் லிஸ்ட் உள்ளே
Healthy Breakfast: காலை உணவாக இதை சாப்பிடுங்க! நாள் முழுக்க எனர்ஜி தரும் டாப் 5 ஆரோக்கிய உணவுகள் லிஸ்ட் உள்ளே
Healthy Breakfast: காலை உணவை சரியாகத் தேர்வு செய்வது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற உதவும். ஆரோக்கியமான நாளைத் தொடங்க உதவும் 5 காலை உணவு தேர்வுகளைப் பார்க்கலாம்.

ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட் ஐடியாஸ்
ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்க காலை உணவு ரொம்ப முக்கியம். பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்கிப் செய்வதோ அல்லது ஏதோ ஒன்றைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவதோ கூடாது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஃபைபர், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த டாப் 5 ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ராகி இட்லி அல்லது ராகி தோசை
நமது உணவில் கேழ்வரகைச் சேர்க்க ராகி இட்லி, ராகி தோசை சிறந்த வழிகள். ராகியில் ஃபைபர் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன. ராகி தோசை ஊற்றும்போது எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. அதேபோல, ராகி இட்லியை சாம்பார் மற்றும் காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிட்டால் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும்.
இட்லி
எளிதில் செரிமானமாகும் காலை உணவுகளில் இட்லிக்குத்தான் முதல் இடம். அரிசி, உளுந்து சேர்த்து ஆவியில் வேகவைப்பதால் இதற்கு எண்ணெய் அதிகம் தேவைப்படாது. உளுந்தில் இருந்து நமக்கு புரோட்டீன் கிடைக்கிறது. இட்லியை வெறும் சட்னியோடு மட்டும் சாப்பிடாமல், சாம்பார் சேர்த்துச் சாப்பிட்டால் பருப்பு மற்றும் காய்கறிகள் மூலமாக புரோட்டீன், ஃபைபர் போன்ற சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.
பெசரட்டு
பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பில் செய்யும் பெசரட்டு, புரோட்டீன் மற்றும் ஃபைபர் தரும் ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட். இதில் உள்ள தாவர அடிப்படையிலான புரோட்டீன் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதை குறைந்த எண்ணெயில் சுட்டு எடுப்பது நல்லது. இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி சட்னி அல்லது வேர்க்கடலை சட்னியோடு சாப்பிட்டால் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
கோதுமை ரவை உப்புமா
சாதாரண ரவை உப்புமாவுக்குப் பதிலாக கோதுமை ரவையில் செய்யும் உப்புமா சுவையாக இருக்கும். உடலுக்கும் ரொம்ப நல்லது. கோதுமை ரவையில் உள்ள ஃபைபர் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். உப்புமாவில் கேரட், பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை அதிகமாகச் சேர்த்தால் ஃபைபர், வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு அதிகரிக்கும். வேர்க்கடலை அல்லது பிற நட்ஸ்களை அளவாகச் சேர்ப்பதன் மூலம் சுவையும் ஊட்டச்சத்தும் கூடும்.
வெஜிடபிள் ஊத்தப்பம்
தினசரி உணவில் காய்கறிகளைச் சேர்க்க வெஜிடபிள் ஊத்தப்பம் ஒரு சுவையான வழி. தோசை மாவில் ஊத்தப்பம் ஊற்றி, அதன் மேல் கேரட், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்க்கலாம். இப்படிச் செய்வதால் காலை உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிக்கும். ஆனால், இது ஆரோக்கியமாக இருக்க எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துவது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

