today is the last date for neet exam

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு, அகில இந்திய அளவில், நீட் என்றழைக்கப்படும் பொது நுழைவு தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்த போதிலும் தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31 உடன் முடிவடைந்தது .

இந்நிலையில் 25 வயதிற்குட்பட்டோர் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்விற்கு விண்ணபிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து அனுமதி வழங்கியது.

வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

நீட் தேர்வானது மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .