"வீடு வீடா போயி பிரிச்சி மேயும் அரசு" கொரோனாவை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம் ..! 

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் படி, ஊரடங்கு உத்தரவு ஒரு பக்கம், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடல், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் வெளியில் வர அனுமதி.... பேரிடர் மீட்பு குழுவினர் ஒருபக்கம், ராணுவத்தினர் ஒரு பக்கம்.. என  நிலைமை மிகவும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குஜராத் மற்றும் மும்பையில் சாலைகளிலேயே கொரோனாவால் பாதித்து கீழே விழும்  அபாயம் ஏற்பட்டு உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போதே மக்களுக்கு அச்சம் பற்றிக்கொள்கிறது. எனவே  நிலைமையை கட்டுக்குள் வைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கட்டாயம்  ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதை புரிந்துகொண்ட அதற்கற்றவாறு செயல்படுவது நல்லது 

அந்த வகையில் தமைகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பம்பரம் போன்று சுழன்று பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் பணி செய்து வருகின்றனர். இதற்காக 80 பேர் அடங்கிய குழு, "நான்கு நான்கு" பேராக சிறு குழுவாக பிரிந்து, வீடு வாடாக சென்று சோதனை செய்கின்றனர்

வீட்டில் யாராவது கொரோனா அறிகுறிகளுடன் இருக்கின்றனரா ? அவர்களுக்கு ஏதாவது தேவை உள்ளதா ? எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என தொடங்கி மேலும் அவர்களுக்கு தேவையான கிருமி நாசினியை வழங்கி வருகின்றனர். மக்களும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதே போன்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று சோதனை செய்து வருகின்றனர். பத்து நாட்களுக்கு இந்த சோதனை திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம் என உள்ளது தமிழக அரசு