மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்! 500 பெண்களுக்கு சேலை, அன்னதானம்!
15 சென்ட் நிலத்தில் 15 லட்சம் செலவில் கோயில் கட்டி 6 அடி உயரத்தில் சிலையும் வைத்து நாள்தோறும் பூஜை செய்கிறார். மனைவி நினைவாக 500 பெண்களுக்கு அன்னதானமும் இலவச சேலையும் வழங்குகிறார்.
திருப்பத்தூர் அருகே ஒருவர் தனது மனைவியின் நினைவாக கோயில் கட்டி, 6 அடி உயர சிலை வைத்து, தினமும் வேளை தவறாமல் பூஜை செய்துவருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டத்தைச் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவருக்கும் திருமணம் நடந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமண வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்துவந்த இவர்களுக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்ற வருடம் சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி மரணம் அடைந்தார். மனைவி இறந்ததால் வேதனையடைந்த சுப்பிரமணி மனைவி நினைவாக கோயில் கட்ட முடிவு செய்தார். இதற்காக 15 சென்ட் சொந்தமான நிலத்தில் 15 லட்ச ரூபாய் செலவிட்டு கோயில் கட்டியுள்ளார்.
உடனே ஒரு லட்சம் தேவையா? தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்
இந்தக் கோயிலில் ஆள் உயரத்தில் தத்ரூபமான சிலையை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி கோயிலில் தினமும் காலையும் மாலையும் பூஜை செய்துவருகிறார். வரும் மார்ச் 31ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. அன்றைய தினம் 500 பெண்களுக்கு இலவச சேலை வழங்கி, அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்.
ஷாஜஹான் தாஜ்மகால் கட்டியதைப் போல சுப்ரமணி தன் மனைவி ஈஸ்வரிக்கு சிலை வைத்து, கோவில் கட்டி பூஜை செய்துவருவது ஊர்மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்து ஊர்மக்களும் ஈஸ்வரி கோயிலுக்குச் சென்று அதிசயத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.
இதேபோல ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில், இறந்து போன கணவருக்கு, அவரது மனைவி பத்மாவதி கோவில் கட்டியுள்ளார். பளிங்குக் கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கணவர் அங்கிரெட்டிக்கு மார்பளவு சிலை வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் அவருடைய சிலைக்கு முன் பூஜை செய்து பிரார்த்திக்கிறார். வார இறுதி நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்துகிறார்.
அமெரிக்க அதிபராக இருந்தபோது பெற்ற 117 பரிசுகளை மூடி மறைத்த டிரம்ப்!