tips for lkg admission



கல்வி  என்பது  இன்று  வியாபாரமாகி விட்டது. வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள  தான் இன்று எத்தனையோ   பிரபலமான  தனியார்  பள்ளிகள்  பகுதி வாரியாக  தங்கள்  பள்ளியின்  கிளையை  தொடங்க  ஆரம்பித்து விட்டனர்.

பெயர் பெற்ற பள்ளிகள் என்பதால் , அது ஒன்று போதுமே கல்வி  என்ற  பெயரில் கொள்ளை அடிப்பதற்கு. மக்கள்  பொதுவாகவே  நம்  பிள்ளைகள்  நல்ல  பள்ளியில்  படிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு  பணத்தை வேண்டுமென்றாலும்  தர  மனதார  தயாராகி விட்டனர் . இதனை  தெரியாதவர்களா  கல்வி  கொள்ளையர்கள் .

ஜூன் மாதம் எல்கேஜி அட்மிஷன் 6 மாதத்திற்கு முன்பே முடித்து  விடுகின்றனர். அதாவது வரும் ஜூன் மாதம்,  பள்ளியில்  சேர்வதற்கு  கடந்த ஜனவரி  மாதமே   அட்மிஷன்  முடிந்துள்ளது . ஒரு சில  பள்ளியில்  இந்த மாதத்துடன் முடிகிறது .

குறைந்த பட்சம் 5௦ ஆயிரத்திற்கு மேல் தான் அட்மிஷன்  பீஸ். இதையும் தாண்டி  நம்  குழந்தைக்கு  சீட்  கிடைக்கவில்லையே  என  கவலையில் உள்ளனர்  சில பெற்றோர்கள்.

சற்று சிந்தித்து பாருங்கள், திறமை உள்ள குழந்தை எங்கிருந்தாலும்  கற்றுகொள்ளும்  விழித்துக்கொள்ளும். தரமானதாகவும் , குறைந்த  கட்டணம்  வசூலிக்கும் பள்ளிகள் எத்தனையோ இருக்கும்போது , அதிக கட்டணம்  வசூலித்து  கல்வியை  வியாபராம்  செய்யும்  பள்ளியில் தான்  தரம்  இருக்கும்  என நினைக்க  வேண்டாமே...யோசித்து முடிவெடுங்கள்