மனிதனின் வாழ்க்ககையே ஒரு சிறிய கனவு போல,  பிறப்பு  முதல் இறப்பு வரை வெகு  விரைவில்  பல ஆண்டுகள்  ஓடிவிடும். ஆனால் நாம்  ஒவ்வொருநாளும்  தூங்கும்  சில கனவுகள்   வந்து நம்மை  வியப்பில் ஆழ்த்தும்,  அல்லது  பயந்து  தூக்கம் வராமலும்  செய்யும்.

அது சரி..அதனால என்ன இப்பன்னு தோணுதா ? ஆம் நாம் தூங்கும் போது காணும் கனவை பொருத்து,  அது பலிக்குமா பலிக்காதா ? எப்பொழுது பலிக்கும்? என பல கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம் .

கனவு காணும் நேரம் மற்றும் பலன்  

மாலை 6 – 8.24 மணி    - ஒரு வருடத்திலும்,

இரவு 8.24 – 10.48 மணி  - 3 மாதத்திலும்,

இரவு10.48 – 1.12 மணி   - 1 மாதத்திலும்,

இரவு1.12 – 3.36 மணி    - கனவு 10 தினங்களிலும்,

விடியக்காலை 3.36     - 6.00 மணி உடனடியாக பலிக்கும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

சில கனவுகளின்  பலன்கள்

வானவில் கனவில் வந்தால் -  பணம், செல்வாக்கு அதிகரிக்கும்.

நட்சத்திரங்கள்- பதவி உயர்வு

கனவில் நிலவு -  தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் -  திருமணம்  நடக்கும்

இறந்தவர்களின் சடலம் -  சுபநிகழ்ச்சிகள்

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு -  பணம், பாராட்டு குவியும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

நிர்வாணமாக இருப்பத்து போல்  கனவில் கண்டால் – அவமானம் தேடி வருமாம்

எனவே கனவு காண்பது பெரிதல்ல...எந்தநேரத்தில் எந்த கனவை கண்டோம் என்பதுதான் முக்கியம்