துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எங்கு கேட்டாலும் பணம் ஈசியாக உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே..!

திட்டமிட்டு செய்து வரும் காரியம் நல்ல முறையில் நடக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பல பிரச்சனைகள் நீங்கும். பணவரவு போதுமான அளவு இருக்கும். உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பு கூடும்.

தனுசு ராசி நேயர்களே...!

விலகி இருந்த பழைய உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது. சேமிக்க கற்றுக்கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உங்களுக்கு ஆதாயம் கட்டாயம் கிடைக்கும். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிக்க பல்வேறு திட்டங்களை தீட்டுவீர்கள். 

கும்ப ராசி நேயர்களே...!

உங்கள் செயலில் புத்திசாலித்தனம் இருக்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். நண்பர்களின் வருகை ஏற்படலாம்.

மீன ராசி நேயர்களே...!

புதிய நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதகரிக்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது.