துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே..! 
 
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்யக்கூடிய நிலை வரலாம். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

பொறுமையுடன் இருந்து பல காரியங்களை எளிதில் முடிக்க கூடிய நாள் இது.  பிள்ளைகளின் உடல்நலத்தில் ஆரோக்கியமுடன் இருக்க அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பழைய நண்பர்களை சந்தித்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்த பல திட்டங்களை தீட்டுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து உடனுக்குடன் அதனை நிறைவேற்றி விடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

உறவினர்களின் அன்புத்தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விருந்தினர்  வருகை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் 

மீனராசி நேயர்களே..!

பழைய கடனை தீர்க்கும் நாள்.  வழிகளை யோசனை செய்து அதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழும். மனைவிவழி உறவினர்கள் எப்போதும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.