Temple: திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்...! இன்று முதல் அனுமதி..!!
இன்று முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
களக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த 27-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைவதை முன்னிட்டு, இன்று முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படும் என்றும், இன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு, செல்லலாம் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார்கள்,
இக்கோவில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோவிலை திறக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
தேசிய புலிகள் ஆணையம் கோவிலை திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படாததால், கோவிலை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை நீடிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே திருமலைநம்பி கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தவர். இதனை தொடர்ந்து திருமலைநம்பி கோவில், நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்களப்ட்டுள்ளது. இதேபோல் திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்குறுங்குடி திருமலைநம்பி:
நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும் மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி. வாருங்கள் மகிழ்ச்சியுடன் நம்பி மலைக்கு செல்வோம்.