Horoscope: ஏப்ரல் 27 முதல் லட்சுமி தேவியின் அருள் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

செல்வத்தின் காரணியான சுக்கிரன் ஏப்ரல் 27, 2022 அன்று தனது ராசியை மாற்றி மீன ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் சிலருக்கு சுபமாக இருக்கும், சிலருக்கு அசுபமாக இருக்கும்.

லட்சுமி தேவியின் அருள்:

குறிப்பாக, சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தில் லட்சுமி தேவியும் சிறப்பு ஆசி கிடைப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அப்படி வருகிறது ஏப்ரல் 27 முதல் லட்சுமி தேவியின் அருள் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

மேஷ ராசியினருக்கு ஏப்ரல் 27 முதல் லட்சுமி தேவியின் நேரடி அருள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சுற்று பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். 
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.பொருளாதாரம் மேம்படும். இந்த நேரத்தில் புதிய வேலைகள் சாதகமாக இருக்கும்.

விருச்சகம்:

விருச்சிக ராசியினருக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
கல்வித் துறையுடன் சாதகமான முடிவுகள் பிறக்கும். புதிய வேலையில் லாபம் கிடைக்கும்.

கும்பம்:

லட்சுமி தேவியின் அருளால், கும்பத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். நம்பிக்கை அவசியம். நன்பர்களின் உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். 

மீனம்:

லட்சுமி தேவியின் அருளால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்வில் மன நிம்மதி ஏற்படும். உங்களுக்கு நிதி நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க ....Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு நிகழும் சனி பெயர்ச்சி...எந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டத்தின் கதவுகள் திறக்கும்...