Sani Peyarchi 2022: சனி பகவான் 2022 ஏப்ரல் 29 மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார். இதனால் வக்ர பயிற்சியில் இருந்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.
சனி பகவான் 2022 ஏப்ரல் 29 மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார். இதனால் வக்ர பயிற்சியில் இருந்து கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர்.
ஜோதிடத்தின் படி, ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். பின்னர் 12 ஜூலை 2022 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார். எனவே, இந்த ராசி மாற்றம் காரணமாக குறிப்பிட்ட சில ராசிகள் உஷாராக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு:
உங்களுக்கு சனியின் பார்வையில் கெடு பலன்கள் ஏற்படும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த ராசிகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். இந்த காலக்கட்டத்தில் வன்முறை தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கலாம்.
கும்பம்:
சனி பகவான் தற்போது கும்ப ராசிக்கு மாறியுள்ளார். இந்த வகையில் கும்பத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை உருவாகி வருகிறது. நீங்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது அவசியம். உறவுமுறை மோசமடையக்கூடும். இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசி நபர்கள் எப்போதும் கோபமாக இருக்கலாம். எச்சரிக்கை அவசியம், இல்லையெனில் உங்களுக்கு பிரச்சனைகள் தொல்லை கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் கூடும். உங்கள் இலக்கை அடைவதில் கடுமையாக உழைக்க வேண்டு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம்.கடன் சுமை கூடும்.
