தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலேயெ தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இது சட்டப்படி சாத்தியமில்லை.

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகள் கழித்து மனைவி அவரது கணவரை காதலியுடன் சேர்த்து வைத்துள்ள சம்பவம் பேரதிர்ர்சியை கொடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் திருமணமான மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கணவனுக்கு விவாகரத்து கொடுத்து, அவரின் காதலியை திருமணம் செய்துகொள்ள உதவியுள்ளார் ஒரு பெண். மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு வினோதமான வழக்கில், திருமணமான மூன்று வருடங்களுக்கு பிறகு தனது கணவரை அவரின் காதலியுடன் சேர்த்துவைப்பதற்காக, அவரை விவாகரத்து செய்துள்ளார்.

இது குறித்து பேசிய இவ்வழக்கின் வழக்கறிஞர், ’’அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலேயெ தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இது சட்டப்படி சாத்தியமில்லை. ஆனால், அவரின் மனைவி மிகவும் முதிர்ச்சியடைந்தவர். அவர் தனது கணவனை அவரின் காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக அவரை விவாகரத்து செய்து அவரது காதலியை திருமணம் செய்ய உதவியுள்ளார்’’என்று கூறினார்.