இந்தியாவில் தங்கமும் வெள்ளியும் பிரசாதமாக வழங்கப்படும் ஒரே கோவில்! எங்குள்ளது தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் தங்கமும், வெள்ளியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

The only temple in India where gold and silver are offered as offerings! Do you know where it is?

இந்தியாவில் பிரசித்திப்பெற்ற பல கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பின்பற்றப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இத்தகைய கோயில்கள்க்கு திரளாக சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர். பல கோயில்களில் லட்டு மற்றும் சிரா போன்ற உணவுகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆனால் சில கோவில்களில் பிரசாதம் பற்றி கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் தங்கமும், வெள்ளியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

உண்மை தான்.. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஒரு தனித்துவமான கோயில் உள்ளது. இங்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆம்! நீங்கள் கேட்டது உண்மைதான். இந்த கோயிலில் வழிபாடு முடிந்ததும், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனுடன் இங்கு வருபவர்கள் தங்கம்-வெள்ளி போன்றவற்றையும் மகாலட்சுமி கோவிலில் காணிக்கையாக செலுத்தி வாழ்வில் வெற்றிபெற பிரார்த்தனை செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால் வருட இறுதியில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லாமில் அமைந்துள்ள இந்த மகாக்ஷ்மி கோயில் தந்திரயோதசியின் புனித நாளில் மட்டுமே பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இங்கு 5 நாட்கள் மாதா மகாலட்சுமியை விசேஷமாக வழிபட்டு, தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியை அலங்கரிக்க வீட்டில் இருந்து ஆபரணங்களை கொண்டு வரும் எந்தவொரு பக்தரும், தனது வருமானத்தை இரட்டிப்பாக்கி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

தீபாவளியின் போது கோவில் சிறப்பு அலங்காரம்

தீபாவளியின் போது, இந்த கோயில், ரூபாய் நோட்டு மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் அலங்காரத்திற்காக பக்தர்கள் அதிகளவு பணத்தை நன்கொடையாக வழங்குகின்றனர். பின்னர் அவர்களுக்கும் திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த தொகைக்கான ரசீது அவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது, மேலும் டோக்கன் கொடுக்கப்படும் போது பணம் மற்றும் ஆபரணங்கள் மற்றொரு சிறப்பு நாளில் திருப்பித் தரப்படுகின்றன.

தங்கம் வெள்ளி பிரசாதம் 

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், தீபாவளி பண்டிகையின் போது பக்தர்களுக்கு ஆபரணங்களும் பணமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை எடுத்துச் செல்ல வெகு தொலைவில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு திரளாக வந்து செல்கின்றனர். ஆனால், பக்தர்கள் இங்கு கிடைக்கும் ஆபரணங்களை செலவு செய்யாமல் கருவூலத்தில் சேமித்து வைத்துள்ளனர். இதன் மூலம் செல்வம் 4குமடங்கு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

கனவில் ஒரு வாகனம் அல்லது நகைகள் திருடப்பட்டால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios