the great benefits of six face lord murugan

கந்த சஷ்டி தொடங்கி விட்டது. இன்று முதல் தொடங்கும் கந்த சஷ்டியில் எப்படி விரமிருப்பது, எதற்காக விரதம் இருக்க வேண்டும் என்பதை இதற்கு முன்னதாக பார்த்தோம். 

முருக பெருமானுக்கு பல பெயர்கள் உண்டு...கந்தன், முருகன் , ஆறுமுகசாமி என பெயர்களில் அழைத்து வரும்.

முருகனுக்கு சொந்தமான ஆறு முகங்களில், ஓவ்வொரு முகத்திற்கும்,ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது 

ஆறுமுகம் 

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,

இரு முகம் - அக்னிக்கு,

மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,

நான்முகம் - பிரம்மனுக்கு,

ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு

ஆறு முகம் - கந்தனுக்கு. 

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு தெரிவித்து இருப்பார்.இன்னும் சொல்லப்போனால்,

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

2. பக்தர்களுக்கு அருள் ஒரு முகம்,

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

4. உபதேசம் புரிய ஒரு முகம்,

5. தீயோரை அழிக்க ஒரு முகம்,

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

இது போன்று பல முகங்களை கொண்ட முருகன், ஒவ்வொரு விதத்தில் நம்மை பாதுகாத்தும், நல்லதை நிலைத்திட செய்யவும், தீயதை அழிக்கவும், என்றும் நிலைக்கொண்டு இருப்பவர் தான் ஆறுமுகசாமி என அழைக்கப்படும் முருக பெருமான்