டீ, காபி இரண்டுமே உலக அளவில் அதிகமானவர்களால் விரும்பப்படும் பானமாக இருந்து வருகிறது. இரண்டுமே சுறுசுறுப்பை தரக் கூடியது என்றாலும் காலையில் ஒரு நாளை துவங்குவதற்கு இரண்டில் சிறந்தது எது? எது குடித்து நாளை துவங்கினால் என்ன பயன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
டீ, காபி என ஏதாவது ஒரு சூடான பானத்துடன் தான் அன்றைய நாளை துவங்குவது பலரது வழக்கமாக உள்ளது. இதில் பலரின் காலை தேர்வாக உள்ளது காபி தான். அதிலுள்ள காஃபின் சுறுசுறுப்பை தருவதால் விரைவாக செயல்பட உதவுகிறது. அதே சமயம் டீயும் அதிகமானவர்களால் விரும்பப்படும் ஒரு பானமாக உள்ளது. மனதை அமைதிப்படுத்துவதாகவும், சுவையானதாகவும் பலரும் நினைப்பதால் காலை நேரத்தை டீ உடன் துவங்குவதை அதிகமானவர்கள் விரும்புவது உண்டு.
காபி, டீ இரண்டுமே வேறு வேறு நற்பலன்களை தரக் கூடியவை. காபி உடனடி ஆற்றலை தரக் கூடியதாகும். அதே சமயம் டீ, படிப்படியாக ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதாகும். அதிக நேரம் விழித்திருப்பவர்களுக்கு ஏற்றது டீ தான். இரண்டுமே ஆக்ஸிஜவேற்றிகள். வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளதால் நீண்ட கா, ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியவை தான். ஆனால் காலை நேரத்திற்கு ஏற்ற பானம் எது? காலையில் காபி குடிப்பது நல்லதா அல்லது டீ குடிப்பது நல்லதா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
காஃபின் அளவு :

காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. சராசரியாக 8 அவுன்ஸ் அளவு கொண்ட ஒரு கப் காபியில் சுமார் 95 மில்லிகிராம் அளவு உள்ளது. இது பெரும்பாலான டீ வகைகளை விட அதிகம். ஆனால் 8 அவுன்ஸ் அளவு டீயில் 30 முதல் 50 மில்லிகிராமை விட குறைவான அளவு காஃபின் தான் உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள் :
தேயிலை, குறிப்பாக கிரீன் டீ போன்ற டீ வகைகளில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதய ஆரோக்கியத்தை அதிகரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை கொண்டுள்ளன. மறுபுறும் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக குளோரோஜெனிக் அமிலங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை அதிகம்.
செரிமான நன்மைகள் :
செரிமான ஆரோக்கியத்தை பொறுத்தவரை டீ தான் பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. கெமோமில் மிளக்குக்கீரை மற்றும் இஞ்சி போன்ற மூலிகை சேர்க்கப்பட்ட டீக்கள் செரிமான அமைப்பை சீராக்குகின்றன. குடல் வீக்கள், வயிற்று அசெளகரியம் ஆகியவற்றை தணிக்கும் திறன் உடையவையாக சொல்லப்படுகிறது.
மன ஆரோக்கியம் :
மனத் தெளிவு, கவனம் ஆகியவற்றை அளிப்பதில் இரண்ட பானங்களுமே பலரின் விருப்ப தேர்வாக உள்ளன. ஆனால் அவற்றின் செயல்பாடுகளில் வித்தியாசம் உள்ளது. காபியில் உள்ள காஃபின் உடனடியாக தீவிரமாக ஆற்றலை வழங்குகிறது. உடனடியாக நீங்கள் விழிப்பு நிலைக்கு மாறி, கவனம் செலுத்தும் ஆற்றலை பெற உதவுகிறது. அதே சமயம் குறைந்த காஃபின் கொண்ட டீ, சீரான மற்றும் நிலையான கவனத்தை பெற உதவுகிறது.
இதனால் இரண்டு பானங்களுமே நல்லது தான் என்றாலும் காலையில் உங்களின் பணிகள் எப்படி உள்ளதோ அதற்கு தகுந்தாற் போல் காபி-டீ பானங்களை தேர்வு செய்து குடிப்பது நல்லது. குறிப்பாக தூக்கம் நீங்கி சுறுசுறுப்பாக அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க வேண்டும், படிக்க வேண்டும், உடனடி சோம்பல் நீங்க வேண்டும் என்பவர்கள் காபியை தேர்வ செய்து குடிக்கலாம். அதே சமயம், ரிலாக்சாக நிதானமாக நாளை தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள், நிலையான ஆற்றலை பெற வேண்டும் என்பவர்கள் டீயை தேர்வு செய்து குடிக்கலாம்.
