2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் 5300 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பெண்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றம் இல்லாமல் இன்னும் தொடர்ந்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது.
மதுபானங்களின் விலையை உயர்த்தி மதுபிரியர்களை கோபமடைச் செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விலையேற்றத்தால் மது குடிப்போர் நலச்சங்கமும் குடிமகன்களும் இந்த விலையேற்றத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் 5300 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பெண்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றம் இல்லாமல் இன்னும் தொடர்ந்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழக அரசின் இதய துடிப்பே இந்த டாஸ்மாக் கடைகள் தான். இதில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு தமிழக அரசு இயங்குவற்கு உறுதுணையாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மதுபானங்களின் விலை உயர்த்தி தமிழக அரசு உத்தவிட்டிருப்பது குடிமகன்களுக்கு தலையில் இடி இறங்கியது போல் இருக்கிறது. புதிய விலையின் படி குவாட்டருக்கு தற்போது விற்கும் விலையை விட ரூ10 இதே போன்று பீர்க்கும் ரூ10 ஆப் ரூ20 புல் ரூ40ம் கூடுதலாக விலையை உயர்த்தி விலைபட்டியலை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
இதன் மூலம் ஆண்டிற்கு தமிழக அரசிற்கு வருமானம் சுமார் 3ஆயிரம் கோடி கிடைக்கும். கடந்தாண்டு டாஸ்மாக் வருமானம் ரூ31 ஆயிரம் கோடி. இந்த விலை உயர்வு இரவு நேரம் அறிவிக்கப்பட்டதால் குடிமகன்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே பல இடங்களில் பிரச்சனை வெடித்தது. அரசு அறிவிக்காமலேயே டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே விலைகள் கூடுதலாகவே விற்பனை செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்து வரும் வேலையில் இந்த மது விற்பனை உயர்வு குடிமகன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
TBalamurukan
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 7, 2020, 9:37 AM IST