கொரோனா பாதிப்பு..? அவசரமாக தருமபுரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் நபர் ..! 

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் இருக்கும் நான்காயிரத்திற்கும் அதிகமானவரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவியை மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒரு நிலையில் ஏற்கனவே தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒருவரும் அறிகுறிகளுடன் தற்போது அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரை  அடுத்தகட்ட சிகிச்சைக்காகவும் கொரோனா பாதிப்பு உள்ளதா என சோதனை மூலம் உறுதி செய்வதற்காகவும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.