sunglass affecting eye sight



சன் கிளாஸ், கண்ணுக்கு நல்லதோ இல்லையோ , சும்மா ஸ்டைலா இருந்தாலே போதும் , நமக்கு  பிடித்த கலரில்  தேர்வு செய்து  ஸ்டைலா  போட்டுக்கொள்வது  வழக்கம் . ஆனால் இது மாதிரியான  சன் கிளாஸ்  எந்த அளவுக்கு   பிரச்சனை ஏற்படுத்தும் என்பது  நம்மில் யாருக்காவது தெரியுமா ?

தரமற்ற கண்ணாடிகளில் பூசப்பட்டிருக்கும்  கோட்டிங்  மற்றும்  வண்ணப்பூச்சு  , வெயிலில்  செல்லும் போது மெதுவாக உருக ஆரம்பிக்கும், அது நமக்கே தெரியாமல், சருமத்தில் படுவதால்,  தோல் நோய் ஏற்பட வாய்ப்புண்டு . அதுமட்டுமில்லாமல்,

இது போன்ற தரமற்ற கண்ணாடியை பயன்படுத்துவதால்,  நம் கண்களுக்கு அதிகள் அழுத்தம் தர வேண்டி இருக்கும் , மேலும்  கண்ணுக்கு அழுத்தம் தரப்பட்டு  காலப்போக்கில்,  தலைவலை  கண்ணீரில் நீர்  வடிதல் உள்ளிட்ட  பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

விலை குறைவாகவும் , பல வண்ணங்களிலும்  கிடைப்பதால் நம்மில் பலரும் கண்மூடித்தனமாக   தரமற்ற கண் கண்ணாடியை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது .