sunami came as per previous prediction
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நியூ கலிடோனியா அருகே உள்ள தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானது
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நியூ கலிடோனியா, வானுயாடு உள்ளிட்ட தீவுப்பகுதியில் இன்று காலை ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9.43 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்ட தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கி உள்ளன.
மேலும் ஆஸ்திரேலியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்கள்.
Massive earthquake strikes near Australia in the Pacific Ocean issuing tsunami warning. via /r/worldnews https://t.co/4uUmzzI1gdpic.twitter.com/FT8sM9U1V8
— fa (@fa77775682) November 20, 2017
இதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இலங்கையில் கிணற்று நீர் வற்றியது என்றும், திமிங்கலம் கரை ஒதுங்கியதுமாக இருந்ததை செய்திகளாக வெளிவந்ததை பார்க்க முடிந்தது. அதனை நிரூபணம் செய்யும் விதமாக இன்று ஆஸ்திரேலிய கடற்பகுதியில் சுனாமி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் சுனாமியின் தாக்குதல் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
