students wished to join in photography
மனித உறுப்பில் சிறந்தது கண்கள். நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. கற்பனை வளம் நிறைந்த இவ்வுலகில் நம் கண்ணோட்டத்தில் பார்க்கும் புதுமை நிறைந்த ஒன்றை ,மற்றவருக்கு படமாக காட்டும் கருவி கேமரா. மனித கண்ணும் கேமராவும் சமம் என்று சொல்லலாம்.
கேமராவில் பிலிம்(film) இருப்பது போல நாம் கண்களில் ரெட்டினாவும்(retinavum),
டயாபாரம்(diaphgram)-> ஐரிஸ்,(iris)
அபர்செர்(aperture) -> பூப்பில்,(pupil)
லென்ஸ்(lens) -> லென்ஸ்,(lens)
இவ்வாறு நம் கண்களில் உள்ளது போல் கேமராவிலும் பல பாகங்கள் உள்ளன. ஒளியை சிறைபிடிப்பது போட்டோகிராபி எனப்படும்.(capturing of light is known as photography)ஒளியின் அளவைப் பொறுத்து புகைப்படத்தின் நிறமும்,குவாலிட்டியும் மாறும்.சில வருடங்களுக்கு முன்பு வரை கேமரா என்பது அதன் விலையைப் பொறுத்து ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் இப்போது கேமரா என்பது ஒரு அவசியமான கருவி போல் அனைவரின் கையிலும் உள்ளது.
தற்போது வரும் மொபைல் போன்களில் கூட அதிகஅளவு மெகாபிக்ஸல்(megapixel) கொண்ட கேமரா வருவதால்,(DSLR )கேமரா மீது கொண்ட மோகம் குறைந்தாலும்,புகைப்படம் (photography) மீதுள்ள ஆர்வம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான்போகிறது .......
