மகள் மீதே மோகம்...! பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை ..! மகள் எடுத்த அதிரடி முடிவு...! 

இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் திருவாரூரில் நடைபெற்று உள்ளது. இதன்பேரில் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் இவர் ஒரு கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணமாகி தற்போது இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அதன்பின்னர் இவருக்கும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இந்த பெண்ணிற்கும் ஒரு குழந்தை பிறந்து உள்ளது.

இதனை காரணமாக வைத்து அவ்வப்போது தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் அசிங்கம் என நினைத்த மகள் மனக் கவலையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தன் அம்மா திருமணம் செய்துள்ள அந்த நபர் தான் பாலியல் வன்கொடுமை செய்து தன்னை பலாத்காரம் செய்து விட்டார் என எனவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தை மீது புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது