பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது..! அடித்து கூறும் முரளிதர ராவ்...!

பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் அதிரடியாக தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பலவிதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலி கிராமத்தில் நடந்த பாரதி ஜனதா கட்சியின் முப்பெரும் விழாவில் முரளிதரராவ் இவ்வாறு தெரிவித்துள்ளா ர். இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி. நட்டாவிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல நிர்வாகிகள் அறிமுகம் செய்வதற்காகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய முரளிதரராவ் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஸ்டாலின் "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது அதனை தடுப்பதற்கு என்ன முயற்சி எடுத்தார்? 

தொடர்ந்து பேசிய முரளிதரராவ், "பாரதிய ஜனதா கட்சி இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.