specialities in nala theertha in thirunallar
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்துல ஆதிபுரின்னு பேராம். இங்கே சிவபெருமானை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதா தலபுராணத்துல சொல்லப் பட்டிருக்கு. பிரம்மா பூஜை செய்த இந்தப் பெருமானுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் அப்டின்னு பேரு. தர்ப்பைகள் சூழ்ந்த காட்டுல இந்த லிங்கப் பெருமான் இருந்ததால, அவருக்கு இந்தப் பேராம். இங்க தல விருட்சம் தர்ப்பைதான்!
இங்க இருக்கற லிங்கப் பெருமான சுயம்புவா தோன்றியவர்னு சொல்லுவாங்க. முசுகுந்த சக்கரவர்த்தினு ஒருத்தரு.. இங்க ஆட்சி செய்துட்டிருந்தாராம். அப்போ, அடிகக்டி இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுட்டு போவாராம். அவர் அமைச்ச லிங்கம், ஆலயம் எல்லாம் இப்ப நாம பாக்குறோம். இந்தத் தலத்துக்கு நளவிடங்கர், நளேஸ்வரம் அப்டின்னெல்லாம் பெயருங்க இருக்கு.
நள மகாராஜா கலிபுருடன் அம்சமான சனி பகவானால பல இடையூறுகளுக்கு உள்ளாகி, கடைசியில இந்தக் கோயிலுக்கு பக்கத்துல இருக்கற குளத்துல வந்து நீராடி, அனைத்து கஷ்டங்களையும் விட்டாராம். அதனாலயே இந்தக் குளத்துக்கு நளதீர்த்தம் அப்டின்னே பேரு வந்திருக்கு. அதுக்கு பிறகுதான் எல்லாவிதமான செல்வங்களையும் நளன் திரும்ப பெற்றானாம்.

இங்க இருக்கற தர்ப்பாரண்யேஸ்வரர் விக்ரகத்துக்கு கீழ, ஒரு இயந்திரத் தகடு இருக்கு. ரொம்ப சக்தி வாய்ந்தது அதுங்கிறாங்க. அத சனி பகவானே எழுதினதாகவும், இல்ல இல்ல.. ரிஷிகள் எழுதி வெச்சாங்கன்னும் சில தகவல்கள் இருக்கு. இந்தக் கோயில்ல பரிகாரம்னு வர்ற மக்களுக்கு பரிகாரம் ஆகுற மகிமைக்கு இதான் காரணமாம்.
திருநள்ளாறுலதான் எத்தனை எத்தனை தீர்த்தம்..? இங்குள்ள தீர்த்தக் கட்டங்கள்ல நீராடி பாப விமோசனம் பெறணும்னே பல பேரு இங்க வராங்க.
பிரம்ம தீர்த்தம், வாணிதீர்த்தம், அன்ன தீர்த்தம், அகத்திய தீர்த்தம், நளதீர்த்தம், நளகூப தீர்த்தம் அப்டின்னு இந்த தீர்த்தங்கள்ல நீராட முடியாதவங்க, நள தீர்த்தத்தில் மட்டுமாவது நீராடி வரலாம்.
முதல்ல நள தீர்த்த குளக்கரையில இருக்கற விநாயகரை மூணு தடவை வலம் வந்து வணங்குங்க. இந்த நள தீர்த்த குளத்தை உருவாக்கி வெச்ச முன்னோர்களுக்கு நன்றி சொல்லிட்டு, வலது கையால உள்ளங்கைல தீர்த்தம் எடுத்து, வேண்டிக்கிட்டே, தலையில மூணு தடவை தெளிச்சுக்குங்க. பிறகு கறுப்பு நிற வஸ்திரம் கட்டிக்கிட்டு, உடல்ல நல்லெண்ணெய் கொஞ்சமா தேச்சிக்கிட்டு, மேற்க பார்த்து நின்னு சனி பகவானை மனசுல நினைச்சு நல்லது செய்னு வேண்டிக்கிட்டே, முங்கி குளிங்க. அதுக்குப் பிறகு புதிய வஸ்திரத்தை உடுத்திக்கிட்டு, கோயிலுக்கு போங்க.
ஆனா ஒரு ரெக்வஸ்ட். வேண்டுகோள். எக்காரணம் கொண்டும் நீங்க குளிச்சி முடிச்ச உடனே கட்டிக்கிட்டிருக்கற ஈரத் துணைய, கருப்பு துணிய அங்கயே போட்டுட்டு வந்துடாதீங்க. நீர் நிலைகளை பாதுகாத்தா தான், நம்ம மாதிரி இன்னும் நிறைய பேரு வந்து குளிச்சி, அவங்க பாவங்களை எல்லாம் போக்கிக்க முடியும்.
முடிஞ்சா, கறுப்பு நிற வஸ்திரம், எள், எள் சாதம் இதை எல்லாம் தானம் செய்யலாம். இது சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
