special gym for police in airport

தமிழக காவல்துறையினருக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரமாண்ட உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில், போலீசார் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் அதி நவீன வசதியுடன் கூடிய ஜிம் இன்று திறக்கப் பட்டது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தான்,இந்த உடற்பயிற்சி கூடத்தை நிறுவியது. இதற்குண்டான அனைத்து செலவுகளையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த ஜிம்மில், முதல் நாளே பல காவல் துறையினர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினர். போலிசாருக்கென தனியாக திறக்கப்பட்ட இந்த ஜிம் குறித்து கருத்து தெரிவித்த மற்ற காவல்துறையினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் .