வந்த வேகத்தில் "மருத்துவ உபகரணங்களை"திருப்பி அனுப்பும் ஸ்பெயின்.! சீனாவுக்கு நேரடியாகவே கூறிய பகீர் காரணம்..! 

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ள தருணத்தில் 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நிலையில் சீனாவில் முதன்முதலில் ஹுவாங்' மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சீனா அதனை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால் இந்த வைரஸ் தற்போது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவி விட்டது. இந்த ஒரு நிலையில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய சீனா முன்வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து மருத்துவ உபகரணங்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அந்த உபகரணங்கள் காய்ச்சல் தொற்றை சரியாக உறுதிப்படுத்த தவறுகிறது என ஸ்பெயின் அதனை சீனாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து  ஸ்பெயினில் உள்ள "சீன தூதரகம்" தெரிவிக்கும்போது, சமீபத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட உபகரணங்கள் இது இல்லை. மேலும் காப்புரிமை பெறாத நிறுவனத்திடமிருந்து இவை அனைத்தும் பெறப்படுகிறது என விளக்கம் கொடுத்து உள்ளது. எனவே சீனாவில் இருந்து பெறப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது