ஆந்திராவில் மதிய உணவு இதுவரை பள்ளிகளில் ஒரே விதமாக வழங்கப்பட்டு வந்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பிறகு வாரத்துக்கு 6 நாட்களுக்கு ஆறு வகையான உணவு வழங்க மெனு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா நகரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். உணவின் தரம் குறித்தும் மாணவியரிடம் விசாரித்தார். திங்கட்கிழமை சாதம், பருப்புகுழம்பு, முட்டைக் கறி, வேர்க்கடலை பர்பி வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை புளியோதரை, தக்காளி பருப்பு சாதம், அவித்த முட்டை, புதன்கிழமை பிஸ்மில்லாபாத், ஆலுகுருமா, வேகவைத்த முட்டை, வேர்க்கடலை பர்பி, வியாழக்கிழமை பயித்தம் பருப்பு சாதம், தக்காளி சட்னி, முட்டை, வெள்ளிக்கிழமை சாதம், கீரை பருப்பு, முட்டை, வேர்க்கடலை பர்பி, சனிக்கிழமை சாதம் சாம்பார், சுவீட் பொங்கல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரோஜா கூறுகையில், ''மெனுவில் ஒரு தாய்மாமன் இடத்தில் இருந்து பள்ளி மாணவ- மாணவர்களுக்கு ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சளித்துக் கொள்ளாமல் இருக்க, தானே ஒரு மெனு தயாரித்த ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்வர் இருப்பது ஆந்திர மக்களின் அதிர்ஷ்டம்'' எனக்கூறினார்.