கிட்சன் அலமாரிகளில் உள்ள விடாப்படியான எண்ணெய் பிசுக்கை ஈஸியா சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ்!
சமையலறையில் எண்ணெய் பிசுக்குகளை அகற்றுவது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். சோப்பு நீர், வினிகர் கரைசல், பேக்கிங் சோடா பேஸ்ட் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பிசுக்குகளை எளிதாக அகற்றலாம்.
தினமும் சமைக்கும் போது சமையலறையில் பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ளலாம். சமையல் பாத்திரங்களை வைக்க போதிய இடம் இல்லாதது, போதிய காற்றோட்ட வசதி இல்லாதது, சிங்க்கில் தண்ணீர் அடைப்பது பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சமைக்கும் பெண்கள் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சனை சமையலறை அலமாரிகளில் உள்ள எண்ணெய் பிசுக்களை எப்படி சுத்தம் செய்வது என்பது தான்..
இந்திய சமையலில் எண்ணெய், நெய் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை தவிர்க்க முடியாதவை என்பதால் சமையல் அலமாரியில் எளிதாக எண்ணெய் பிசுக்கு ஒட்டி கொள்கிறது. இந்த பிசுக்கு காலப்போக்கில் பிடிவாதமான கரையாக மாறும், அவற்றை சுத்தம் செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே, இந்த கறைகளை எவ்வாறு அகற்றுவது? நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கிறீர்களா மற்றும் பயனுள்ள தீர்வைத் தேடுகிறீர்களா? உங்களின் இந்தச் சிக்கலைத் தீர்க்க சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோப்பு
விடாப்பிடி எண்னெய் பிசுக்கு கொண்ட சமையல் அலமாரிகளை சுத்தம் செய்ய பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப் லிக்விடை பயன்படுத்தலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் டிஷ் சோப்பை கலக்கவும். பின்னர் இந்த நீரை கொண்டு ஒரு ஸ்காரப்பரை பயன்படுத்தி உங்கள் சமையல் அலமாரிகளை சுத்தம் செய்ய தொடங்குங்கள். பின்னர் ஈரமான துணியால் துணியால் மேற்பரப்பைத் துடைக்கவும். எண்ணெய் பிசுக்கு நீங்கி சமையல் அலமாரிகள் பளிச்சென்று மாறும்.
வினிகர் கரைசல் :
கிட்சன் பொருட்களை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் வினிகர் ஒரு சிறந்த பொருளாகும். இயல்பிலேயே இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால், எண்னெய் பிசுக்கை அகற்ற உதவுகிறது. உங்கள் சமையல் அலமாரிகளில் நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதலில் சிறிது தண்ணீரில் சேர்த்து, பின்னர் இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும், பின்னர் அதை உங்கள் சமையலறை அலமாரிகள் முழுவதும் தெளிக்கவும். சிறிது நேரம் ஊறவைத்த பின்னர், ஒரு துணி அல்லது ஸ்க்ரப்பை வைத்து தேய்த்தால் போதும். எனினும் மர அலமாரிகள் என்றால், குறைவான அளவை பயன்படுத்துவது நல்லது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா பொதுவாக சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக மூலப்பொருளாக அமைகிறது. இது குறிப்பாக பிடிவாதமான கறைகளுக்கு நன்றாக வேலை செய்கிறது. இதைப் பயன்படுத்த, 1-2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியாக ஒரு பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் சமையலறை அலமாரிகளில் தடவவும். சில நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு துணி அல்லது ஸ்கர்ப்பை கொண்டு சுத்தம் செய்து பின்னர் ஒரு ஈரத்துணியை கொண்டு துடைக்கவும்.
சிட்ரஸ் பழங்கள்
சுத்தம் செய்யும் விஷயத்தில் சிட்ரஸ் பழங்கள் நமது சிறந்த நண்பன். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அலமாரிகளின் மேல் தெளிக்கலாம். எலுமிச்சையும் அமிலத்தன்மை கொண்டது இது எண்ணெய் பிசுக்கு கறைகளை எளிதில் அகற்ற உதவுகிறது. இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தை விட்டுச்செல்கிறது. அவற்றை நல்ல வாசனையாக மாற்றும்.